பாவாடையை இழுத்து ஆடியிருக்கக் கூடாது.. நல்ல பாடத்தைக் கத்துக்கிட்டேன்.. கெத்திகா ஷர்மா வருத்தம்!
ஹைதராபாத்: 29 வயதாகும் நடிகை கெத்திகா ஷர்மா சமீபத்தில் ஸ்ரீலீலா, நித்தின் மற்றும் டேவிட் வார்னர் நடிப்பில் வெளியான ராபின்ஹுட் படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் வெளியான 'அதீத சர்ப்ரைஸ்' பாடலுக்கு கெட்ட ஆட்டம் போட்டிருந்தார். ஆனால், அது ரொம்பவே தப்பாக இருந்த நிலையில், சென்சார் போர்டு கத்தரிப்போட படம் வெளியாகும் போது சென்சாரில் சிக்கிவிட்டது.
கடந்த மே 10ம் தேதி ராபின்ஹுட் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது. வீடியோ பாடல் யூடியூபில் வெளியாகும் போதே ரசிகர்கள் அந்த பாவாடை ஸ்டெப் இல்லையே என ஃபீல் பண்ண ஆரம்பித்தனர். ஓடிடியில் படம் வெளியான நிலையில், ரிப்பீட் மோடில் அந்த மல்லிகைப்பூ ஜாக்கெட்டில் மண மணக்க கெத்திகா ஷர்மா ஆடிய குத்தாட்டத்தை கண்டு ரசித்து வருகின்றனர்.

ஆனால், அவர் தான் பாவம் ஓவராக அடிவாங்கிய நிலையில், இந்த பாடல் தனக்கு பெரிய பாடத்தைக் கற்றுக் கொடுத்திருப்பதாக தனது வருத்தத்தை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் புலம்பித் தள்ளியிருக்கிறார்.
கடந்த வாரம் வெளியான சிங்கிள் படம்: டெல்லியை சேர்ந்த கெத்திகா ஷர்மா டோலிவுட்டில் இளம் கவர்ச்சி நடிகையாக கலக்கி வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு ஆகாஷ் புரி நடிப்பில் வெளியான ரொமான்டிக் படத்தில் நடித்து அறிமுகமானார். தொடர்ந்து லக்ஷ்யா, ரங்கா ரங்கா வைபவங்கா, ப்ரோ உள்ளிட்ட படங்களில் நடித்த இவருக்கு விஜய் 69 எனும் இந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர், ராபின்ஹுட் படத்தில் அதீத சர்ப்ரைஸ் பாடலுக்கு நடனமாடியிருந்தார். கடந்த வாரம் ஓடிடியில் அந்த படம் வந்ததை போல இவர் நடித்த புதுப்படமான சிங்கிள் படம் திரையரங்குகளில் மே 9ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. லவ் டுடே ஹீரோயின் இவானா, கெத்திகா சர்மாவுடன் இணைந்து அந்த படத்தில் ஸ்ரீவிஷ்ணு ஹீரோவாக நடித்துள்ளார்.

சென்சாரில் சிக்கிய அதீத சர்ப்ரைஸ்: வெங்கி குடுமுலா இயக்கத்தில் 60 கோடி பட்ஜெட்டில் நிதின், ஸ்ரீலீலா, கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், ஐட்டம் பாடலுக்கு கெத்திகா ஷர்மா என நடித்தும் அந்த படம் பாக்ஸ் ஆபீஸில் வெறும் 14 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்தது. ஒருவேளை சென்சாரில் அந்த பாவாடை இழுக்குற ஹூக் ஸ்டெப்பை கத்தரிக்காமல் இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதலாக வசூல் செய்திருக்கும் என டோலிவுட்டில் கிண்டல் செய்து வருகின்றனர். கெத்திகா ஷர்மா பயங்கர ட்ரோல்களுக்கும் உள்ளானார்.
பாடம் கத்துக்கிட்டேன்: ஒரு நடிகையாக இயக்குநர் சொல்லும் அனைத்தையும் செய்துவிட வேண்டும் என்பது மட்டும் தான் எனக்குத் தெரிந்த ஒன்று. கவர்ச்சியாக நடனமாடுவதும் பல ஹீரோயின்கள் பார்த்த வேலை தான். அதில், ஏதும் தவறு இருப்பதாக நான் உணரவில்லை. அதனால் தான் அந்த பாடலுக்கு அப்படி ஆடியிருந்தேன். ஆனால், சில விஷயங்கள் எப்படி எடுத்துக் கொள்ளப்படும், என்ன விளைவை உண்டாக்கும் என்பதை அதீத சர்ப்ரைஸ் பாடலின் சென்சாருக்குப் பிறகு புரிந்துக் கொண்டேன். அதன் மூலம் நல்ல பாடத்தைக் கற்றுக் கொண்டேன். எதிர்காலத்தில், இதுபோன்ற தவறுகளை தவிர்ப்பேன் என சிங்கிள் படத்தின் புரமோஷனுக்காக பேசும் போது கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











