மல்லிகைப்பூ ஜாக்கெட்.. பாவாடையை வேற இழுத்துவிட்டு ஆபாசமான ஆட்டம்.. ஸ்ரீலீலா படத்திலா இப்படி?
ஹைதராபாத்: தெலுங்கில் வெளியான புஷ்பா 2 படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரீலீலா கவர்ச்சி பொங்க குத்தாட்டம் போட்டிருந்தார். தற்போது அவர் நடித்து வரும் படத்திற்கு இன்ஸ்டாகிராம் மாடல் அழகி கெத்திகா ஷர்மா படு ஆபாசமாக ஒரு குத்தாட்டத்தை போட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார். வர வர நடன இயக்குநர்கள் எல்லாம் ஏன் இந்த அளவுக்கு மோசமான கொரியோகிராஃபியில் இறங்குகின்றனர் என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
விஜய் நடித்த சுறா படத்தில் தமன்னாவின் பேன்ட்டை இறக்கிவிட்டு ஆடுவது போல ஒரு ஸ்டெப் இருக்கும். அதை பலரும் கடுமையாக விமர்சித்தனர். இந்த ஆண்டு பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான டாக்கு மகராஜ் படத்தில் ஊர்வசி ரவுத்தேலாவின் பின்புறம் தட்டுவது போன்ற மோசமான ஸ்டெப்பையும் 60 வயதை கடந்த பாலகிருஷ்ணா கொஞ்சம் கூட கூச்சமின்றி போட்டு நடனமாடியிருப்பார்.

இருட்டில் ரம்பாவின் பின்னால் ரஜினிகாந்த் தட்டி விட்டார் என்கிற பேட்டி இதே அர்த்தத்தில் தீயாக பரவிய நிலையில், பாடலிலேயே மோசமாக பாலகிருஷ்ணா ஆடியிருந்தார். அல்லு அர்ஜுன் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா கவட்டைக்குள் கைவிட்டபடி புஷ்பா 2வில் வந்துச்சே ஃபீலிங்ஸ் என ஆடியதை பார்த்த பல இளைஞர்களும் இளம் பெண்களும் அதைவிட மோசமாக ஆடினால் தான் ரீல்ஸில் டிரெண்டாக முடியும் என இணையத்தில் பண்ண சேட்டைகள் எல்லாம் ஏராளம்.
மல்லிகைப்பூ ஜாக்கெட்: அந்த வரிசையில் தற்போது அடுத்த ஐட்டம் சாங் ஒன்றை தெலுங்கு சினிமா இறக்கியிருக்கிறது. கெத்திகா ஷர்மா மேலாடைக்கு பதிலாக மல்லிகைப்பூவையே ஜாக்கெட் போல அணிந்துக் கொண்டு படு கவர்ச்சியாக ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள ராபின்ஹுட் படத்தின் 'அதித சர்ப்ரைஸு' பாடலுக்கு எக்ஸ்ட்ரா கிளாமரை காட்டி நடனமாடியுள்ளார்.
ஸ்ரீலீலா படம்: தெலுங்கு நடிகர் நிதின் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் ஸ்ரீலீலா ஹீரோயினாக நடித்துள்ளார். புஷ்பா 2 படத்தில் கிஸ்ஸிக் பாடலில் கவர்ச்சி நடனம் போட்ட ஸ்ரீலீலாவின் படத்துக்கு கெத்திகா ஷர்மா கவர்ச்சி டான்ஸ் ஆடியிருக்கிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக காத்திருக்கும் ஸ்ரீலீலாவின் கைவசம் இந்தி, தெலுங்கு என ஆல் இந்தியா அளவில் படங்கள் உள்ளன.
பாவாடையை இழுத்துவிட்டு: டோலிவுட் நடிகர் ரவிதேஜா பாக்யஸ்ரீ போஸ் உடன் கடந்த ஆண்டு நடனமாடியதை பலரும் ட்ரோல் செய்தனர். மிஸ்டர் பச்சன் திரைப்படமும் பெரிதாக ஓடவில்லை. இந்நிலையில், ராபின்ஹுட் படத்தின் பாடலுக்கு தனது பாவாடையை தானே இழுத்து ஆபாசமான நடன அசைவுகளை ஆடி கெத்திகா ஷர்மா இளைஞர்களை கவர்வதற்காக என்ன என்னவெல்லாமோ செய்யும் பாடல் லிரிக் வீடியோ சில வீடியோ காட்சிகளுடன் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.
அடுத்த பீலிங்ஸா?: வந்துச்சே பீலிங்ஸ் பாடல் தான் ரொம்பவே மோசமான கொரியோகிராஃபி என சொல்லப்பட்டு வந்து நிலையில், டாக்கு மகராஜ் படத்தின் தபிதி தபிதி பாடல் அதை முறியடிக்கும் விதமாக மோசமாக இருந்தது. இந்நிலையில், அதையும் ஓவர்டேக் செய்துவிடும் அளவுக்கு அடுத்த ஃபீலிங்ஸ் பாடலாக அதித சர்ப்ரைஸு பாடல் உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











