Don't Miss!
- News
ஓபிஎஸ்-க்கு கட்சியே இல்லை- ஓபிஎஸ் ஒரு செல்லாக்காசு.. இப்படி பொளந்து கட்டுறாரே பொன்னையன்!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Automobiles
சுயமாக மாசை கண்டறியும் கருவி உடன் விற்பனைக்கு வந்த ரெனால்ட் கார்கள்... அரசாங்கத்தின் முயற்சியால் கிடைத்த பலன்!
- Technology
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- Sports
அதனால் தான் அவர் கிங் கோலி.. என்னுடைய 10 வயது உனக்கு தான்.. சுப்மன் கில்லை உற்சாகப்படுத்திய கோலி
- Lifestyle
தினமும் ஒரு கையளவு பாதாம் சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடிப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?
- Finance
அதானி எண்டர்பிரைசஸ்-க்கு அடுத்த பாதிப்பு.. Dow Jones நிலைத்தன்மை குறியீட்டில் இருந்து நீக்கம்..!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சம்பளத்தை உயர்த்திய கே.ஜி.எஃப் நாயகி.. இவ்வளவு சம்பளம் கேட்டால் எப்படி..ஷாக்கான தயாரிப்பாளர் !
சென்னை : கே.ஜி.எஃப் நாயகி ஸ்ரீநிதி தனது சம்பளத்தை ஏகத்திற்கும் உயர்த்தி உள்ளதால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் 'கேஜிஎஃப்'. இந்திய அளவில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஏப்ரல் மாதம் வெளியானது.
இப்படத்தில், நடிகர் யாஷ் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன், மாளவிகா அவினாஷ், ஈஸ்வரி ராவ், சரண் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
விளம்பரத்திற்காக இப்படியா?... சித்ரா நிலை தான் நட்சத்திராவுக்கும்...பரபரப்பை கிளப்பும் ஸ்ரீநிதி

‘கேஜிஎஃப் 2’
உலகம் முழுவதும் வெளியான ‘கேஜிஎஃப் 2' படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது. நாடு முழுவதிலும் ரசிகர்கள் இத்திரைப்படத்தை ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர். அதேபோல, வெளிநாடுகளிலும் இத்திரைப்படம் சக்கைப் போடு போட்டு வருகிறது.

வெற்றிக்கு காரணம் யாஷ்
யாஷின் அசத்தலான நடிப்பு, அவரின் ஸ்டைல் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு காரணமாக அமைந்தது. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி எந்த இடத்தில் பெரிதாக குறை சொல்ல முடியாத அளவுக்கு, தரமான திரைக்கதையால் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் தாண்டி படம் மிரட்டலாக இருந்தது.

ரூ.1200 கோடிக்கு மேல்
இளைஞர்களை அதிக அளவில் ஈர்த்தது. ரிப்பீட் ஆடியன்ஸால் வசூல் வேட்டை உலகம் முழுவதும் சிறப்பாக அமைந்த நிலையில், கே.ஜி.எஃப். 2 ரூ.1200.76 கோடி வசூலித்து இந்தப் படம் மேலும் சாதனை படைத்திருக்கிறது. ஆமிர்கானின் தங்கல், ராஜமவுலியின் பாகுபலி ஆகிய படங்கள் ஏற்கெனவே ரூ.1200 கோடி வசூலை எட்டியிருக்கிறது.

சம்பளத்தை உயர்த்திய நடிகை
இதற்கிடையே இந்தப் படத்தின் வெற்றியால் கே.ஜி.எஃப் ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி தனது சம்பளத்தை ஏகத்திற்கும் உயர்த்தியுள்ளார். தெலுங்கு பட தயாரிப்பாளர் ஒருவர், தனது படத்துக்கு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது , அவர் 2 கோடி ரூபாய் சம்பளமாகக் கேட்டதாகவும் கூறப்படுகிறது. ஸ்ரீநிதியின் சம்பளத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த தயாரிப்பாளர், கே.ஜி.எஃப் படம் ஹிட்டானதற்கும் ஸ்ரீநிதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
Recommended Video

இவ்வளவு சம்பளம் கேட்டால் எப்படி
கே.ஜி.எஃப் படத்தின் வெற்றிக்கு காரணமே யாஷ் மற்றும் பிரஷாந்த் நீலில் இயக்கம் மட்டும் தான். அந்த படத்தில், ஸ்ரீநிதி பெரிதாக எதையும் செய்துவிடவில்லை. இதை ஸ்ரீநிதி புரிந்து கொள்ள வேண்டும் என்றும் இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ள நடிகை, இவ்வளவு சம்பளம் கேட்டால் எப்படி நடிக்க வைப்பது என்றும் தெரிவித்துள்ளார்.