குஷ்புவுக்கு அடுத்த மாசம் 43 வயசாம்!
சென்னை: நடிகை குஷ்புவுக்கு அடுத்த மாதம் 43 வயதில் அடி எடுத்து வைக்கப் போவதாக 'மகிழ்ச்சி' பொங்க ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
தமிழ் ரசிகர்கள் கோயில் கட்டி வழிபாடு நடத்தும் அளவுக்கு உச்சநட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. இப்போது சின்னத்திரையில் கோலோச்சி வருகிறார்.
கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட, தந்தி டிவியில் அச்சம் தவிர் என வலம் வந்து கொண்டிருக்கிறார் குஷ்பு. அதே நேரத்தில் திமுகவில் இப்போது மீண்டும் முக்கியத்துவம் பெற்றும் வருகிறார்.

குஷ்புவுக்கு வயது 43
பொதுவாக நடிகைகள் தமது பிறந்த நாளைத்தான் சொல்வார்கள்.. ஆனால் வயதை சொல்லமாட்டார்கள். ஆனால் குஷ்புவோ தமக்கு அடுத்த மாதம் 43 வயதாகிறது என்று ட்விட்டரில் போட்டு விட்டிருக்கிறார்.

செப்டம்பர் 29-ந் தேதி
1970ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ந் தேதி மும்பையின் அந்தேரியில் பிறந்தவர் குஷ்பு. அடுத்த மாதம் 29-ந் தேதி 43வது வயதில் அடி எடுத்து வைகிறார் குஷ்பு

என்ன சொல்கிறார் 42 வயது குஷ்பு
தற்போது 42 வயதாகும் நடிகை குஷ்பு, ட்விட்டர் பக்கத்தில் அடுத்த மாதம் தமக்கு 43 வயதாகப் போகிறது.. பொதுவாகவே 40 வயதில்தான் வாழ்க்கை ஆரம்பமாகிறது என்பார்கள்.. உண்மை.. இப்போது சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் எதை விரும்புகிறேனோ அதை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறேன். அதை தேர்வு செய்யும் சுதந்திரமும் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

43 வயதா? 34 வயதா?
குஷ்புவின் ட்விட்டர் பக்கத்தில் கிரிஷ், 43 வயதா? 34 வயதா என செக் பண்ணுங்க என்று கிண்டலடித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











