அஜித் பட டைட்டிலில் அறிமுகமாகும் குஷ்பு மகள்.. அடடே மாவீரனுக்குப் பிறகு சரிதாவும் நடிக்கிறாரா.. செம!

சுந்தர். சி மற்றும் குஷ்புவின் மகள்கள் இருவருமே சினிமாவில் களமிறங்கி விட்டனர். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தக் லைஃப் படத்தின் மூலம் அனந்திதா உதவி இயக்குநராக மாறினார். கூடிய சீக்கிரமே இயக்குநராகவும் ஒரு படத்தை இயக்கப் போகிறார். ஆனால், அம்மாவை போல ஹீரோயின் ஆகப் போவது நம்ம அவந்திகா தான். அவரது முதல் படத்தின் பூஜையும் போடப்பட்டு விட்டது.

அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி உள்ளிட்ட பிரபலங்கள் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடித்த ஆரம்பம் படத்தின் டைட்டிலில் தான் அவந்திகா தற்போது அறிமுகமாகவுள்ளார். ஆனால், இந்த படத்தை மலையாளத்தில் படமாக்குகின்றனர். ஆனாலும், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா ரிலீஸாகவே படம் வெளியாக போகிறது.

Khushbu daughter Avantika s debut movie gets Ajith Kumar movie title

நடிகை அவந்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட நிலையில், திரையுலக பிரபலங்கள் மற்றும் சுந்தர். சி மற்றும் குஷ்புவின் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

அப்பா, அம்மா அறிமுகப்படுத்தல: ஆவ்னி சினிமாஸ் என தயாரிப்பு நிறுவனத்தை குஷ்பு மற்றும் சுந்தர். சி நடத்தி வருகின்றனர். சுந்தர். சியும் மூக்குத்தி அம்மன் 2, புருஷன் என 2 பெரிய படங்களை இயக்கி வருகிறார். ஆனால், அவர் இயக்கத்திலோ அம்மாவின் தயாரிப்பிலோ அவந்திகா அறிமுகம் ஆகவில்லை. தனது சொந்த முயற்சியில் ஹீரோயினாக வேண்டும் என போராடிய அவர் மலையாள திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

அவந்திகாவின் 'ஆரம்பம்': அம்மா குஷ்புவை போலவே செம அழகாக இருக்கும் அவந்திகா சினிமாவில் ஹீரோயினாக முடிவெடுத்து விட்டார். உடம்பெல்லாம் டாட்டூக்களை குத்திக் கொண்டு ஏகப்பட்ட போட்டோக்களை போட்டு வந்த அவந்திகா சமீப காலமாக சேலை அணிந்தும் க்யூட்டான போட்டோஷூட்களை நடத்தியும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அஜித் குமாரின் 'ஆரம்பம்' பட டைட்டிலில் அவந்திகா தனது சினிமா ஆரம்பத்தை இனிதே பூஜை போட்டு தொடங்கி உள்ளார். இந்த ஆரம்பம் படத்தை மலையாள இயக்குநர் சுஜேஷ் அன்னி ஈப்பன் இயக்குகிறார்.

சரிதா உடன் குஷ்பு மகள்: சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்துக்குப் பிறகு சரிதா குஷ்பு மகளுடன் இணைந்து ஆரம்பம் படத்தில் நடிக்கவுள்ளார். மேலும், பிரபல மலையாள நடிகரான இந்திரன்ஸ், அல்தாஃப் சலீம், விஜயராகவன், கிருஷ்ணா சங்கர் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர். கூடிய சீக்கிரமே குஷ்பு மகளின் முதல் படம் ரிலீஸுக்கு ரெடியாகி விடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X