உன்னை மாதிரி ஆளுங்களால என் தம்பி விஜய்க்குத்தான் அவமானம்.. நெட்டிசனை நொறுக்கி எடுத்த குஷ்பு!

சென்னை: நடிகை குஷ்புவை தொடர்ந்து நெட்டிசன் ஒருவர் அநாகரிக பதிவுகளால் கடுப்பேற்றி வரும் நிலையில், தவெக தலைவர் விஜய்யின் டிபி வைத்துக் கொண்டு அவரை அசிங்கப்படுத்த வேண்டாம் என நடிகை குஷ்பு அதிரடியாக பதிவிட்டுள்ளார்.

தலைவர் 173 படத்தை இயக்கப் போவதில்லை என்றும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் போன்ற ஆளுமைகளுடன் மீண்டும் பணியாற்ற முடியாமல் போனதற்கு தான் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக சுந்தர். சி அறிக்கை ஒன்றை வெளியிட்டு விலகினார்.

Khushbu feels my brother Vijay will get into trouble like you shameless fellow in a twitter fight

தொடர்ந்து குஷ்புவையும் சுந்தர். சியையும் சோஷியல் மீடியாவில் படுகேவலமாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அதிலும், தவெக வெற்றி என்கிற ஐடியில் வலம் வரும் நெட்டிசன் ஒருவர் குஷ்புவுடன் மோசமான வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகிறார்.

செருப்பு சைஸ் மாதிரி தெரியல: கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து உன் கணவர் சுந்தர். சியை துரத்தி அடித்துவிட்டார்கள் போலத் தெரிகிறதே என படுமோசமாக சுந்தர். சி பற்றி குஷ்புவிடம் நெட்டிசன் ஒருவர் கமெண்ட் போட, என் செருப்பு சைஸ் 41,, அடி வாங்கத் தயாரா என குஷ்பு பதிலடி கொடுத்தார். இந்நிலையில், அதை பார்த்தால் செருப்பு சைஸ் போல தெரியலையே என மீண்டும் ஆபாசமான ட்வீட்டை அந்த நபர் பதிவிட்ட நிலையில், அதற்கும் குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.

என் தம்பி விஜய்க்குத்தான் அவமானம்: உன்னை போன்ற நபர்களால் என் தம்பி விஜய்க்குத்தான் அவமானம். அவருடைய டிபியை வைத்துக் கொண்டு உன்னுடைய உண்மையான முகத்தைக் காட்டாமல் ஒளிந்துக் கொண்டு இப்படியொரு பதிவை போடுகிறாயே என்றும் நீ எவ்ளோ அசிங்கமானவனா இருந்தா உனக்கு உன் முகத்தை கூட காட்ட தில் இல்லையே என்றும் பாவம் உன்னை பெத்தவங்க.. பெத்துட்டாங்க, ஆனால், வளர்த்து ஆளாக்க முடியவில்லை என கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.

விஜய் ரசிகர்கள் சப்போர்ட்: கண்டிப்பா இந்த நபர் தவெகவை சேர்ந்தவராக இருக்க முடியாது. விஜய் ஐடியை பயன்படுத்தி பெண்களிடம் இழிவாக பேசுவது ரொம்பவே தப்பு என நடிகை குஷ்புவுக்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள் மற்றும் தவெகவினர் சப்போர்ட்டுக்கு வந்து சம்பந்தப்பட்ட நபரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X