குட்டி கவுனில் பழைய குஷ்பூ.. உங்க போட்டோவை போடுங்க.. உங்க பொண்ணு போட்டோ வேணாம்.. ரசிகர்கள் கமெண்ட்!

லண்டன் : 90களில் மிகப்பெரிய நடிகையாக இருந்தவர் குஷ்பூ. மற்ற எந்த நடிகையை காட்டிலும் இவரை ரசிகர்கள் கொண்டாடினர்.

இந்நிலையில் தற்போது வளர்ந்த இரண்டு பெண்களின் தாயாக உள்ளார் குஷ்பூ. இயக்குநர் சுந்தர் சியை இவர் மணமுடித்துள்ளார்.

இவரது மகள் நடிப்பு பயிற்சியை முடித்துள்ளதாகவும் அவர் விரைவில் நடிக்க வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிகை குஷ்பூ

நடிகை குஷ்பூ

நடிகை குஷ்பூ, 90களில் மிகவும் பேவரிட்டான நடிகை. இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் தொடர் ஹிட். கமல், ரஜினி, சத்யராஜ், விஜய்காந்த் என இவர் ஜோடி போடாத முன்னணி நடிகர்களே இல்லை எண்ணும் அளவிற்கு இவர் அந்த காலக்கட்டத்தில் பிசியான நடிகையாக இருந்தார்.

தொடர்ந்து நடிப்பு

தொடர்ந்து நடிப்பு

இயக்குநர் சுந்தர் சியை மணமுடித்த குஷ்பூ, தொடர்ந்து நடித்து வருகிறார். கேரக்டர் ரோல்களில் மட்டுமில்லாமல் நாயகியாகவும் இவர் நடித்து வருகிறார். தற்போது ஹரா படத்தில் நடிகர் மோகனுக்கு ஜோடியாகியுள்ளார். தொடரந்து மீரா தொடர், ரியாலிட்டி ஷோக்கள் என்று அம்மணி ரொம்பவே பிசி.

உடல் எடை குறைப்பு

உடல் எடை குறைப்பு

குஷ்பூ என்றாலே கொழுகொழுவென இருப்பது தான் அவரது அடையாளம். ஆனால் சமீபத்தில் தன்னுடைய உடலை நன்றாகவே குறைத்திருந்தார். கடுமையான வொர்க் அவுட் மூலம் இதை சாத்தியப்படுத்தியதாக அவர் தெரிவித்திருந்தார். தான் எடை குறைத்த புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார்.

குஷ்பூவின் புதிய புகைப்படங்கள்

குஷ்பூவின் புதிய புகைப்படங்கள்

அந்தப் புகைப்படங்களில் எலும்பும் தோலுமாக மாறியிருந்த இவரை பார்த்து ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர். அவர் தன்னுடைய அழகை தானே கெடுத்துக் கொண்டதாகவும் அவர் வருத்தம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் குஷ்பூவின் தற்போதைய புகைப்படங்கள் ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.

குட்டி கவுனில் குஷ்பூ

குட்டி கவுனில் குஷ்பூ

லண்டன் சென்றுள்ள குஷ்பூ, தற்போது குட்டி கவுனில் சில புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களில் அவர் பிரம்மா படத்தில் இருந்ததை போல மாறியுள்ளதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். அவரது போட்டோவை பகிராமல் அவரது பெண்ணின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ரசிகர்கள் பாராட்டு

ரசிகர்கள் பாராட்டு

அந்த அளவிற்கு இந்தப் புகைப்படங்களில் மிகவும் இளமையாகவும் அழகாகவும் மாறியுள்ளார் குஷ்பூ. அவரது இந்த மாற்றத்தைப் பார்த்து வாவ் என்றும் செம்ம க்யூட் என்றும் ரசிகர்கள் மேலும் பாராட்டு தெரிவித்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வருத்தம் தெரிவித்த ரசிகர்கள் தற்போது வாவ் என தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X