வாழ்க்கையை கெடுத்ததாக குஷ்பு மீது ரவி மோகன் நடத்திய தாக்குதல்.. மேடம் கொடுத்த ரியாக்ஷனை பாருங்க
சென்னை: ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்ட ரவி மோகன்; சில வருடங்களுக்கு முன்பு அவரை பிரிவதாக அறிவித்தார். அந்தப் பிரிவுக்கு பிறகு பின்னணி பாடகி கெனிஷாவுடன் நெருக்கமான உறவில் இருந்தார். இதற்கிடையே ரவி - ஆர்த்திக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையின்போது நடிகை குஷ்பு முழுக்க முழுக்க ஆர்த்திக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுத்தார். இப்படிப்பட்ட சூழலில் தன் வாழ்க்கையை கெடுத்ததே ஒரு இட்லி நடிகைதான் என்று குண்டை தூக்கி போட்டார் ரவி.
ரவி மோகனுக்கும், தயாரிப்பாளர் சுஜாதாவின் மகளான ஆர்த்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட குஷ்புதான் முதல் காரணம். மேலும் அவர்கள் காதலிக்க தொடங்கியதுமே இந்தத் திருமணத்துக்கு ரவியின் வீட்டில் ஒத்துக்கொள்ளவில்லை என்றும்; குஷ்பு தலையிட்டுதான் பேசி சுமூகமாக அந்தத் திருமணத்தை முடித்து வைத்தார் என்ற பேச்சும் உண்டு. சூழல் இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்பு ரவி வெளியிட்டிருந்த அறிவிப்பில், 'ஆர்த்தியை பிரிகிறேன்' என்று குறிப்பிட்டிருந்தார்.

மீண்டும் கிளம்பிய பிரச்னை: ஆர்த்தியுடனான பிரிவை அறிவித்த பிறகு பின்னணி பாடகி கெனிஷாவுடன் நெருக்கமான உறவில் இருந்தார். ஆர்த்தியோ சிங்கிளாக இருந்தார். இப்படிப்பட்ட சூழலில் சில வாரங்களுக்கு முன்பு கெனிஷா வெளியிட்டிருந்த வீடியோவில், பல விஷயங்களை எமோஷனலாக பேசிவிட்டு; ரவியை பிரிவதாகவும்; சென்னையிலிருந்து வெளியேறுகிறேன் என்றும் அதிரடியாக கூறியிருந்தார். அதனையடுத்து ஆர்த்தியின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டும் வைரலானது குறிப்பிடத்தக்கது.
கதறிய ரவி மோகன்: கெனிஷாவும் தன்னைவிட்டு பிரிவதாக முடிவெடுத்ததை அடுத்து கடுப்பான ரவி மோகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இவரும் தன் மனதில் இருந்த பல விஷயங்களை கொட்டினார். முக்கியமாக ஒரு நடிகை குறித்தும் ஓபனாக பேசியிருந்தார். 'நடிகையின் பெயரை சொல்லமாட்டேன். இட்லி நடிகை என்று வேண்டுமானால் சொல்கிறேன். அவரால்தான் என் வாழ்க்கை நாசமாகிவிட்டது. ஏற்கனவே நான்கு சீனியர் நடிகர்கள் என்னிடம் வந்து, 'அந்த நடிகையால் எங்கள் வாழ்க்கையும் நாசமாக பார்த்தது என்று சொன்னார்கள்' எனவும் கூறியிருந்தார்.
குஷ்புவின் பதிலடி: ரவி மோகன் நடிகையின் பெயரை சொல்லாவிட்டாலும்; அவர் குறிப்பிட்டது நடிகை குஷ்புவைத்தான் என்று பலரும் சொன்னார்கள். ஏனெனில் குஷ்பு பெயரில்தான் தமிழ்நாட்டில் இட்லியெல்லாம் வந்தது நினைவிருக்கலாம். ரவி அப்படி சொன்ன சில மணி நேரத்திலேயே ஆர்த்திக்கு சப்போர்ட் செய்திருந்தார் குஷ்பு. மேலும் இன்னொரு பதிவில், 'சிலர் தங்களது டி.என்.ஏவை நிருபிப்பதிலேயே ஆர்வமாக இருக்கிறார்கள். நான் சொன்னதெல்லாம் சரிதான் என்று உணர்த்தியதற்கு நன்றி' என மறைமுகமாக ரவியை தாக்கியிருந்தார்.
குஷ்புவின் ரியாக்ஷன்: மீண்டும் ரவி மோகன் - ஆர்த்தி - கெனிஷா பிரச்னை தலை தூக்கியிருப்பதாலும்; இதில் குஷ்புவின் பெயர் அதிகம் அடிபடுவதாலும் திரைத்துறையில் கவனிக்கக்கூடிய விஷயங்களில் ஒன்றாக மாறியது. சூழல் இப்படி இருக்க டபுள் ஆக்குபென்சி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ரவி மோகன் விவகாரம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு உடனடியாக ரியாக்ட் செய்த அவர், 'ப்ளீஸ் வேறு ஏதாவது கேள்வி இருந்தால் கேளுங்கள்' என கேஷுவலாகவும்,அதேசமயம் கொஞ்சம் கடுப்புடனும் அதனை கடந்து சென்றுவிட்டார்.


Click it and Unblock the Notifications
