அவன் இல்லாமல் மகள் அனந்திதா இல்லை.. ஓபனாக பேசிய குஷ்பு.. எமோஷனலான மகள்.. என்ன நடந்தது?

சென்னை: தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த ஹீரோயின்களில் ஒருவர் குஷ்பு. அவர் இயக்குநர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க டபுள் ஆக்குபென்சி என்ற படத்தின் மூலம் க்ரியேட்டிவ் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. அதில் குஷ்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.

கோலிவுட்டின் எவர் க்ரீன் ஹீரோயின் என்று பெயர் எடுத்தவர் குஷ்பு. ஏகப்பட்ட ஹிட் படங்களில் நடித்த அவர்; முறைமாமன் படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் சுந்தர்.சியை காதலித்தார். இரண்டு பேரின் காதலுக்கும் வீட்டில் சம்மதம் கிடைத்ததை தொடர்ந்து திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு மொத்தம் இரண்டு மகள்கள். மூத்தவர் பெயர் அவந்திகா. இளையவர் பெயர் அனந்திதா. இரண்டு பேருமே தாய் வழியில் சினிமாவில் வெல்ல வேண்டும் என்ற ஈடுபாட்டில் இருப்பவர்கள்.

Khushbu s Emotional Speech Leaves Daughter Anandita in Tears at Audio Launch
Photo Credit:

மூத்த மகள் சினிமாவில்: அந்தவகையில் மூத்த மகளான அவந்திகா மலையாள திரைப்படமான ஆரம்பம் படத்தில் நடித்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்புதான் அந்தப் படத்துக்கான பூஜை கேரளாவில் நடந்தது. தாய் குஷ்பு போன்றே அவந்திகாவும் ஹீரோயினாக தமிழ் மற்றும் மலையாளத்தில் கலக்குவார் என்று எல்லோரும் எதிர்பார்த்திருக்கிறார்கள். குஷ்புவும் தனது மகளுக்கு நடிப்பு பற்றிய டிப்ஸ்களை அடிக்கடி தருவதாகவும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read
சி.எம் ஆன பிறகு விஜய் கோட் போட காரணம் இதுதான்.. அவர் அதெல்லாம் தாங்கமாட்டாராம்.. அம்மா சொன்ன காரணம்
சி.எம் ஆன பிறகு விஜய் கோட் போட காரணம் இதுதான்.. அவர் அதெல்லாம் தாங்கமாட்டாராம்.. அம்மா சொன்ன காரணம்

இரண்டாவது மகளும்: சூழல் இப்படி இருக்க குஷ்புவின் இரண்டாவது மகளான அனந்திதாவும் இப்போது சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார். ஏற்கனவே அவர் மணிரத்னத்திடம் பொன்னியின் செல்வன், தக் லைஃப் ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். இப்போது டபுள் ஆக்குபென்சி என்ற திரைப்படத்தின் மூலம் க்ரியேட்டிவ் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார். அப்படத்தை அஷ்வின் கந்தசாமி இயக்க சந்தோஷ் என்பவர் ஹீரோவாக நடித்திருக்கிறார். ரேஷ்மா, விடிவி கணேஷ், சம்யுக்தா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

குஷ்பு பேச்சு: படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் பேசிய நடிகை குஷ்பு, "சந்தோஷ் எங்கள் குடும்பத்தில் ஒரு மகன் மாதிரி. அனந்திதா லண்டன் செல்லும்போது ஆறு மாதங்கள்கூட தாக்கு பிடிக்க முடியாது என்றுதான் நினைத்தேன். ஏனெனில் சந்தோஷைவிட்டுவிட்டு அவளால் இருக்க முடியாது என தெரியும். இருந்தாலும் நான் படிக்க வேண்டும் என சொல்லிவிட்டு சென்றாள். அங்கே போன பிறகு சந்தோஷும், அனந்திதாவும் எப்போது இந்தக் கதையை பேசினார்கள் என்றும் தெரியவில்லை.

தும்மினாலும் அழுகைதான்: சந்தோஷ் தும்மினாலும் அனந்திதா அழுதுவிடுவாள். போன ஜென்மத்தில் அவர்கள் இரண்டு பேரும் ட்வின்ஸ் என்றுதான் நினைக்கிறேன். இந்தக் கதையை கேட்கும்போதுதான் இயக்குநரை சந்தித்தேன். ரொம்ப ரொம்ப சூப்பராக இருந்தது. அத்தனையும் இதில் இருந்தது. இதுவரைக்கும் இந்த மாதிரியான கதையை கேட்டதில்லை. சுந்தர்.சிக்கும் பிடித்திருந்தது. சந்தோஷ்தான் ஹீரோ என்பதில் அனந்திதா உறுதியாக இருந்தார். அவர் பெரிய ஸ்டாராக வருவார். அவரை அறிமுகப்படுத்தியதற்கு நான் பெருமையடைவேன்" என்றார். அவர் இப்படி பேசும்போது மேடையில் இருந்த அனந்திதா கண்கள் கலங்கிவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X