என் அப்பன் முருகன் தான் என் குலதெய்வம்.. கோபுரத்தை பார்த்து நெகிழ்ந்த சுந்தர் சி.. கூடயாருனு பாருங்க
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்ததுமே அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் கோடைக்கானல், ஊட்டி போன்ற இடங்களில் ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்க. தவெக தலைவர் விஜய் திருச்செந்தூர், ஷீரடிக்கு சென்றார். அந்த வகையில் குஷ்பு, சுந்தர் சி பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசணம் செய்தார்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் களம் முன் எப்போதும் இல்லாத அளவில் மிகவும் பரபரப்பாக இருந்தது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மதுரை மத்திய தொகுதி வேட்பாளராக திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். மதுரை மத்திய தொகுதியில் திமுகவின் மூத்த அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எதிர்த்து பிரச்சாரம் செய்தார்.

சுந்தர் சி: பிரச்சாரத்தை மீனாட்சி அம்மன் கோயிலிருந்து தொடங்கிய சுந்தர் சி, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை பார்க்கும் போது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. எவ்வளவு பெரிய கட்டமைப்பு வசதிகளை கொண்டு வந்திருக்கலாம். ஆனால், ஆட்சியில் அதிகாரத்தில் இருந்தவர்கள் அதை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த வாராணசிக்கும் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இருக்கும் வாராணசிக்கும் எவ்வளவு வித்தியாசம் தெரியுமா என முதல் பிரச்சாரத்திலேயே கொளுத்திப்போட்டார்.
முருகர் என் குலதெய்வம்: இப்போது தேர்தல் நடந்த முடிந்து வரும் மே 4ந் தேதி (திங்கட் கிழமை) தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், குஷ்பு, சுந்தர் சி பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசணம் செய்தனர். அப்போது கோவில் கோபுரத்தை பார்த்து மெய்மறந்து பிரார்த்தனை செய்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சுந்தர் சி, நல்ல நாளில் கோவிலுக்கு வர வேண்டும் என நினைத்து வந்தேன். என்னுடைய குலதெய்வமே முருகர் தான். அதுமட்டுமில்லாமல் எனக்கு பிடித்தமான தெய்வமும் கூட, இதனால் நான் பழனிக்கு அடிக்கடி வருவேன் என்றார். குஷ்புவுடன் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தனது குடும்பத்துடன் வந்து சாமி தரிசணம் செய்தார்.


Click it and Unblock the Notifications