இட்லி நடிகை என கூறிய ரவி மோகன்.. குஷ்பூவின் பதிலடி என்ன தெரியுமா?.. ஆர்த்திக்கு சப்போர்ட்
சென்னை: ஆர்த்தியிடமிருந்து பிரிவதாக சில வருடங்களுக்கு முன்பு அறிவித்தார் ரவி மோகன். அவர் பிரிவை அறிவித்தாலும் இன்னும் இரண்டு பேருக்கும் சட்டப்பூர்வமாக விவாகரத்து கிடைக்கவில்லை. சூழல் இப்படி இருக்க கெனிஷாவும் நேற்று திடீரென வீடியோ வெளியிட்டிருந்தார். அவரைத் தொடர்ந்து ஆர்த்தி ரவியும் காட்டமான போஸ்ட்டை இன்ஸ்டாவில் போட்டிருந்தார். இந்நிலையில் ரவி மோகன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பல விஷயங்களை கொட்டி பேசினார். அப்போது இட்லி நடிகைதான் என் வாழ்க்கையை கெடுத்தார் என்றும் குண்டை தூக்கி போட்டார்.
ஆர்த்தியும், ரவியும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகு பல வருடங்கள் கழித்து இரண்டு பேரும் பிரிந்திருக்கிறார்கள். இந்த பிரிவை முன்னெடுத்தது ரவிதான். ஆர்த்தியை பிரிந்த ரவி; பின்னணி பாடகி கெனிஷாவுடன் நெருக்கம் ஏற்பட்டு பழகிவந்தார். இரண்டு பேருக்குமிடையே நட்புக்கும் மேலே ஒரு உறவு இருப்பதாகத்தான் கருதப்பட்டது. அவர்களும் அதற்கு தகுந்தபடியே நடந்துகொண்டிருந்தார்கள். எனவே விரைவில் அவர்களுக்கு திருமணம் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

கெனிஷாவின் வீடியோ: இப்படிப்பட்ட சூழலில் கெனிஷா நேற்று வீடியோவை வெளியிட்டு பல விஷயங்களை தெரிவித்தார். முக்கியமாக, யாருடன் பழக வேண்டும் என்பது ரவி மோகன்தான் முடிவெடுக்க வேண்டும். அவர் ஒன்றும் சின்ன குழந்தை இல்லை எனவும் அதிரடியாக கூறினார். அதுமட்டுமின்றி இனிமேல் நான் அவருக்காக போரிடப்போவதில்லை என்றும்; சென்னையை விட்டு தான் வெளியேறுவதாகவும் தெரிவித்தார். அதை பார்த்த ரவியின் முன்னாள் மனைவி ஆர்த்தியோ இன்று காட்டமாக இன்ஸ்டாகிராமில் பதிலடி கொடுத்திருந்தார்.
ரவி மோகன் செய்தியாளர் சந்திப்பு: இந்த விஷயத்தை மேலும் பரபரப்பாக்கும் விதமாக ரவி மோகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், 'எனது வாழ்க்கையை மூன்று எழுத்து நடிகைதான் கெடுத்தார். பெயர் சொல்லமாட்டேன். இட்லி நடிகை என்று சொல்கிறேன். அந்த நடிகையால் எங்கள் குடும்பமே நாசமாக போயிருக்கும் என்று மூன்று சீனியர் நடிகர்கள் என்னிடமே சொல்லியிருக்கிறார்கள். அந்த நடிகைக்கு என்னை பற்றி பேசுவதற்கு எந்தவிதமான அருகதையும் இல்லை. ஒருவரின் பெர்சனல் வாழ்க்கை, இமேஜுடன் விளையாடக்கூடாது. அது தவறு' என கொதித்திருந்தார்.
யார் அந்த நடிகை?: ரவி மோகன் சொன்ன அந்த மூன்றெழுத்து இட்லி நடிகை யார் என்று பலரும் தேடலில் ஈடுபட்டார்கள். பெரும்பாலானோர், அது குஷ்பூதான் என்று அடித்து சொன்னார்கள். ஏனெனில் ரவிக்கு குஷ்பூ மூலம்தான் ஆர்த்தி பழக்கம் என்றும்; அவரால்தான் இவர்களுடைய திருமணமே நடைபெற்றது என்றும் இவர்கள் பிரிவு பற்றிய அறிவிப்பு வந்தபோதே ஒரு தகவல் பரவியது. இப்போது செய்தியாளர் சந்திப்பிலேயே ரவி பல விஷயங்களை போட்டு உடைத்தது இந்த விவகாரத்தை அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தி சென்றிருக்கிறது.
குஷ்பூவின் பதில்: இந்நிலையில் ரவி மோகன் அப்படி சொன்ன சில மணி நேரத்திலேயே குஷ்பூ தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், "தங்களை நிரூபிப்பதிலேயே சிலர் பிடிவாதமாக இருக்கிறார்கள். நான் சொன்னாதெல்லாம் சரி என்று நிரூபித்ததற்கு நன்றி" என கூறியுள்ளார். மேலும் ஆர்த்தி ரவியின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில், 'ஒரு தாயுடன் எப்போதும் விளையாடாதீர்கள். அதிலும் தன் குட்டிகளுடன் இருக்கும் ஒரு பெண் சிங்க நீங்கள். உங்களுக்கு இன்னும் அதிக சக்தியும், தைரியமும் கிடைக்கட்டும் என் செல்லமே' என சப்போர்ட்டும் செய்திருக்கிறார். இத்தனை நாட்கள் இந்த விஷயத்தில் குஷ்பூவின் பெயர் நேரடியாக அடிபடாமல் இருந்தது. இப்போது அது நடந்திருப்பதால்; இனிமேல் இதில் என்னென்ன நடக்கப்போகிறதோ? என்ற கேள்வியும் பலரிடம் எழுந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications
