அப்பப்பப்பா.. என்னா வெயில்.. மேகமூட்டமே இல்ல.. நடிகையின் அலப்பறை.. இதுக்கேவா? நெட்டிசன்ஸ் நெத்தியடி!

சென்னை: சென்னை வெயிலைப் பார்த்து மிரண்டு போன நடிகைக்கு நெட்டிசன்கள் பதில் தெரிவித்து வருகின்றனர்.

பாலிவுட் நடிகையான குஷ்பு 1988ஆம் ஆண்டு இயக்குநர் எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் வெளியான தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மலையளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார் குஷ்பு. 1990களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார் குஷ்பு.

இடிப்பு

இடிப்பு

ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தார் நடிகை குஷ்பு. இந்திய சினிமாவில் இதுவரை யாருக்கும் கோவில் கட்டப்படாத நிலையில் நடிகை குஷ்புவுக்கு அவர் தமிழ் சினிமாவின் உச்ச நடிகையாக இருந்த போது முதல் முறையாக கோவில் கட்டி சந்தோஷப்படுத்தினர் ரசிகர்கள். ஆனால் அந்த கோவில் 2005ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது.

குஷ்பு இட்லி

குஷ்பு இட்லி

நடிகை குஷ்பு தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக இருந்தபோது அவரது பெயரில் பல உணவு பொருட்கள் விளம்பரப்படுத்தப்பட்டன. குஷ்பு இட்லி, குஷ்பு காஃபி என பல உணவுகள் அறிமுகமானது. இதில் குஷ்பு இட்லி இன்றும் மிகவும் பிரபலம். இதேபோல் குஷ்பு புடவை, குஷ்பு ஜிமிக்கி என ஏராளமான பொருட்கள் குஷ்பு பெயரில் வலம் வந்தது.

34 ஆண்டுகள்

34 ஆண்டுகள்

இதனை தொடர்ந்து கடந்த 2000ஆம் ஆண்டில் இயக்குநர் சுந்தர்சியை காதல் திருமணம் செய்து கொண்டார் குஷ்பு. அவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நடிகை குஷ்பு சுமார் 34 ஆண்டுகளாக சென்னையில் வசித்து வருகிறார். தற்போது நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார் நடிகை குஷ்பு.

ரொம்ப வெயில்

அரசியல் வாழ்க்கையிலும் பிஸியாக உள்ள நடிகை குஷ்பு சென்னை வெயில் குறித்து டிவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதாவது, சென்னை வெயிலாகவும் வெப்பமாகவும் இருக்கிறது..ஒரு மேகமூட்டம் இல்லை.. கோடை காலம் தொடங்கிவிட்டதா? என கேட்டுள்ளார். குஷ்புவின் இந்த டிவிட்டை பார்த்த நெட்டிசன்ஸ் அவருக்கு நெத்தியடி பதில் கொடுத்து வருகின்றனர்.

ஏசி கார் தானே

குஷ்புவின் டிவிட்டுக்கு ஆமாம் என்று பதில் கூறியுள்ள நெட்டிசன், தான் ஏற்கனவே வடகமும் வத்தலும் தயாரிக்க ஆரம்பித்துவிட்டதாக கூறியுள்ளார். மற்றொரு நெட்டிசன் மஃப்சல் பஸ்ல ட்ராவல் பண்ற மாதிரி டிவிட் பண்றீங்க.. ஏசி கார்ல தான போறீங்க.. உங்களுக்கு என்ன கவலை என கேட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.

இன்னும் இருக்கே..

இதுக்கே பயந்தா எப்படி மேடம்... இன்னும் ஏப்ரல், மே மாசம் எல்லாம் இருக்கு என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன். மற்றொரு நெட்டிசனான இவர், இளநீர், கறும்பு ஜூஸ் குடிங்க. நிறைய ஸ்விமிங் செய்யுங்க என்று குஷ்புவுக்கு அட்வைஸ் கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X