»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

காதல் கொண்டேன் படம் வெளியான பிறகு நிறைய படங்களில் நடிக்க சான்ஸ் கிடைத்தும், சிவாஜியின் பேரன்துஷ்யந்தனுடன் நடிக்கக் கிடைத்த சக்ஸஸ் பட சான்ஸை மட்டும் ஏற்றுக் கொண்டார் சோனியா அகர்வால்.

சிவாஜி அளவுக்கு துஷ்யந்தனும் பாப்புலராவார், அப்படியே தானும் மிகவும் பிரபலமாகிவிடலாம் என்று தப்புக்கணக்குப் போட்டார். இதனால் பிற சான்ஸ்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு சக்ஸஸ் படத்தில் நடித்தார்.

ஆனால், படத்தில் பெயரில் இருந்த சக்ஸஸ் பாக்ஸ் ஆபிசில் பெரும் தோல்வியடைந்துவிட்டது. பெரிய வீட்டுப்பிள்ளை என்பதற்காக நடிக்கவே தெரியாவிட்டாலும், பர்சனாலிட்டியே இல்லாவிட்டாலும் கூடஹூரோவாகிவிடலாம் என்ற காலம் எல்லாம் மலையேறிவிட்டதை பிரபு அண்ட் குடும்பத்துக்கு யாராவது எடுத்துச்சொன்னால் தேவலை.

இந்தப் படத்தில் நடித்தற்காக இப்போது வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறாராம் சோனியா. இந்த நேரத்தில்யாரோ சொல்லக் கேட்டு சம்பளத்தையும் உயர்த்திவிட்டதால் முன்பு அவரைத் தேடி வந்த சான்ஸ்களையும்இப்போது காணவில்லை.

இதனால் இவர் முழுக்க முழுக்க நம்பியிருப்பது சிலம்பரசனுடன் நடித்து வரும் கோவில் படத்தை மட்டும் தான்.சாமி படத்தை இயக்கிய ஹரி எடுத்து வரும் படம் இது.

இது தவிர உற்சாக பானத்திற்கும் சோனியா அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக கோடம்பாக்கத்தில் பேசிக்கொள்கிறார்கள். தொப்பை இருந்தால் தான் தமிழ் சினிமாவில் முன்னுக்கு வர முடியும் என சில சினிமா ஆசாமிகள்சொல்ல, அதற்காக உ.பாவை அதிகம் உட்கொண்டு வருகிறார் என்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil