Kiara Advani Pregnant: கேம் சேஞ்சர் பட ஹீரோயின் கர்ப்பம்.. சமந்தா கொடுத்த ரியாக்‌ஷனை பாருங்க!

மும்பை: பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியான கியாரா அத்வானி - சித்தார்த் மல்கோத்ரா தங்களுக்கு விரைவில் குழந்தை பிறக்கப்போவதாக சூப்பரான போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ஸ்வீட்டான செய்தியை தெரிவித்துள்ளனர். கியாரா அத்வானியின் போஸ்ட்டுக்கு கீழே சமந்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மகேந்திர சிங் தோனியின் பயோபிக் படத்தில் மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் ஹீரோவாக நடித்து அசத்தியிருந்தார். அந்த படத்தில் சாக்‌ஷி தோனி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை கியாரா அத்வானி.

Kiara Advani Siddharth Malhotra Samantha

ஆனால், அந்த படத்தில் அவர் ஃபேமஸ் ஆனதை விட அதன் பின்னர் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் ஆந்தாலஜியில் வைப்ரேட்டரை பயன்படுத்தும் காட்சியில் உச்சகட்ட ரியாக்‌ஷனை கொடுத்து உலகளவில் டிரெண்டாகி விட்டார்.

கியாரா அத்வானி கர்ப்பம்: பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வரும் கியாரா அத்வானி தென்னிந்தியாவில் டோலிவுட்டில் மகேஷ் பாபு மற்றும் ராம் சரண் உடன் இணைந்து நடித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியான கேம் சேஞ்சர் படம் பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டாலும் அந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றியை குவிக்கவில்லை. பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட கியாரா அத்வானி தற்போது தான் கர்ப்பமாக உள்ளதாக அறிவித்துள்ளார்.

குழந்தை வரப்போகுது: விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான ஷெர்ஷா திரைப்படத்தில் சித்தார்த் மல்கோத்ரா மற்றும் கியாரா அத்வானி இணைந்து நடித்த போதுதான் இருவருக்குள்ளும் காதல் தீ மூண்டது. அதன் பின்னர் உடனடியாக திருமணமும் செய்து கொண்ட இருவரும் குழந்தை பெற்றுக் கொள்வதையும் ஒரு சில நடிகைகள் போல தள்ளிப்போடாமல் உடனடியாக பெற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Kiara Advani Siddharth Malhotra Samantha

சமந்தா ரியாக்‌ஷன்: சித்தார்த் மல்கோத்ரா மற்றும் கியாரா அத்வானி இருவரும் வெறும் கைகளை மட்டும் காட்டி அதில் குழந்தையின் சாக்ஸை பிடித்துக் கொண்டிருப்பது போன்ற போட்டோவை வெளியிட்டு விரைவில் குழந்தை வரப்போகுது என்றும் பெற்றோர்கள் ஆகப்போகிறோம் என்றும் அறிவித்துள்ளனர். அதனை பார்த்த நடிகை சமந்தா ஓ மை காட் வாழ்த்துகள் என கமெண்ட் போட்டுள்ளார். சாரா அலி கான், ஆலியா பட், ரகுல் ப்ரீத் சிங், ராஷி கன்னா உள்ளிட்ட பல நடிகைகள் கியாரா அத்வானிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Kiara Advani Siddharth Malhotra Samantha

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X