ஒரே ஒரு ஷங்கர் படம்.. ஓஹோன்னு வாழ்க்கை.. நயன்தாரா சம்பளத்தை பீட் பண்ணிய டான் 3 நடிகை!
மும்பை: டான் 3 படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ள நடிகை கியாரா அத்வானி அதிரடியாக தனது சம்பளத்தை 3 மடங்கு உயர்த்தியிருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன. பாலிவுட்டில் தோனி பயோபிக் படமான எம்.எஸ். தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு ஜோடியாக சாக்ஷி தோனி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் கியாரா அத்வானி.
நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் வெப்சீரிஸிலும் இவர் நடித்த நடிப்பை பார்த்து இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தனர். மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக தெலுங்கில் நடித்த கியாரா அத்வானி தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கேம் சேஞ்சர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

ஷங்கர் பட ஹீரோயின்: ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் கேம் சேஞ்சர் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள பாலிவுட் நடிகை கியாரா அத்வானி அந்த படத்தில் நடிப்பதற்காக வெறும் 4 கோடி ரூபாய் தான் சம்பளமாக பெற்றிருந்தார். ஆனால் ஷங்கர் படத்தின் ஹீரோயினாக மாறிவிட்ட நிலையில், தற்போது கியாரா அத்வானியின் ரேஞ்சே மாறிவிட்டது.
வார் 2: ஹ்ரித்திக் ரோஷனை வைத்து வார் படத்தை எடுத்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற சித்தார்த் ஆனந்த் அடுத்து ஷாருக்கானை வைத்து பதான் படத்தை இயக்கி ஆயிரம் கோடி ரூபாய் வசூல் ஈட்டியிருந்தார். இந்த ஆண்டு மீண்டும் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியான ஃபைட்டர் படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரிதாக ஓடவில்லை. மீண்டும் வார் படத்தின் பக்கமே போய்விடலாம் என நினைத்த சித்தார்த் ஆனந்த் வார் 2 படத்தை இயக்கி வருகிறார். அந்த காலத்தில் ஹீரோயினாக நடித்து வரும் கியாரா அத்வானிக்கு ஏழு கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது.
டான் 3: ஃபர்கான் அக்தர் இயக்கத்தில் புஷ்கர் மற்றும் காயத்ரி எழுதியுள்ள டான் 3 படத்தில் ஷாருக்கானுக்கு பதிலாக ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்க உள்ளார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கேம் சேஞ்சர் படமே இன்னும் வெளியாகாத நிலையில், அதிரடியாக தனது சம்பளத்தை உயர்த்தி வரும் கியாரா அத்வானி டான் 3 படத்திற்காக 13 கோடி ரூபாய் சம்பளம் வாங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி பாலிவுட் வட்டாரத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

நயன்தாராவை பீட் பண்ணிட்டார்: இந்தியாவில் தீபிகா படுகோனுக்கு அடுத்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அதிக சம்பளம் வாங்கி வரும் நிலையில், தற்போது கியாரா அத்வானி நயன்தாராவை பின்னுக்கு தள்ளி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்கி படத்திற்காக தீபிகா படுகோன் 20 கோடி சம்பளம் வாங்கி வருகிறார். அவரைத் தொடர்ந்து நடிக்க நயன்தாரா ஒரு படத்துக்கு 10 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்று வருகிறார். இந்நிலையில், கியாரா அத்வானியின் சம்பளம் தற்போது 13 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ஷங்கர் ரன்வீர் சிங் மற்றும் கியாரா அத்வானியை வைத்து இந்தியில் அந்நியன் இந்தி ரீமேக் எடுக்கப் போவதாக அறிவித்து இருந்தார். அந்த படம் டிராப் ஆன நிலையில், ரன்வீர் சிங் மற்றும் கியாரா அத்வானி ஜோடி இந்த படத்தில் இணைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











