மீண்டும் தாராளம் காட்டிய கியாரா அத்வானி.. அதுவும் ஜாக்கெட்ல அந்த இடத்துல ’கட்’ வேற லெவல்!
Recommended Video
மும்பை: பாலிவுட் நடிகை கியாரா அத்வானி தனது புதிய போட்டோஷூட் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.
நெட்பிளிக்ஸ் தொடரான லஸ்ட் ஸ்டோரிஸ் வெப் தொடரில் சுய இன்பம் செய்யும் பெண்ணாக நடித்து உலகளவில் ரசிகர்களை மிரள வைத்தவர் கியாரா அத்வானி.
காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கான லக்ஷ்மி பாம் படத்தில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

தோனி படத்தில்
2014ம் ஆண்டு வெளியான Fugly படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் கியாரா அத்வானி. ஆனால், அந்த படம் படு தோல்வியை சந்தித்தது. சுஷாந்த் சிங் ராஜ்புட் நடிப்பில் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு படமான எம்.எஸ். தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் தோனியின் மனைவி சாக்ஷியாக நடித்த கியாரா அத்வானி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

லஸ்ட் ஸ்டோரிஸ்
2018ம் ஆண்டு நெட்பிளிக்ஸில் வெளியான Lust Stories வெப் தொடரில் கரண் ஜோஹர் இயக்கிய கதையில் மேகா எனும் ஸ்கூல் டீச்சர் கதாபாத்திரத்தில் கியாரா அத்வானி நடித்திருந்தார். கணவனுடன் உடலுறவில் இன்பம் கிடைக்கவில்லை என செக்ஸ் டாய் உதவியுடன் சுய இன்பத்தில் ஈடுபடும் பெண்ணாக நடித்து உலகளவில் ரசிகர்களை அதிர வைத்தார் கியாரா.

மகேஷ் பாபு படம்
அதே ஆண்டில் தெலுங்கில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பரத் அனெ நேனு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கியாரா அத்வானிக்கு கிடைத்தது. தெலுங்கில் அதிக வசூல் ஈட்டிய படமாகவும் அந்த படம் மாற டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் முன்னணி நாயகியாக மாறினார் கியாரா அத்வானி.

கபீர் சிங்
அர்ஜுன் ரெட்டி படத்தின் பாலிவுட் ரீமேக்கான கபீர் சிங் படத்தில் ஷாகித் கபூருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருந்தார். கடந்த ஆண்டு ரிலீசான அந்த படம் பாலிவுட்டில் 350 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. அதனை தொடர்ந்து அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான குட் நியூஸ் படத்திலும் கியாரா அத்வானி நடித்திருந்தார்.

லக்ஷ்மி பாம்
தமிழில் காஞ்சனா வரிசை படங்களை இயக்கி, நடித்து வெற்றி பெற்ற ராகவா லாரன்ஸ் இந்தியில் காஞ்சனா படத்தை இயக்கி வருகிறார். அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள அந்த படத்திற்கு லக்ஷ்மி பாம் என பெயர் வைத்துள்ளனர். குட் நியூஸ் படத்தை தொடர்ந்து அக்ஷய் குமாருடன் லக்ஷ்மி பாம் படத்திலும் ஜோடியாக நடித்து வருகிறார் கியாரா.
தாராளம்
இந்நிலையில், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ராயல் உடையில் செம்ம க்யூட்டாகவும், அதே சமயம் முன்னழகு தெரியும்படி தாராளம் காட்டி ஹாட்டாகவும் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை கியாரா அத்வானி பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் கியாரா அத்வானிக்கு மிகப் பெரிய ஃபேன் பேஸ் உருவாகியுள்ளதால், லைக்குகள் குவிகின்றன.
செம்ம ’கட்’
கியாரா அத்வானி தற்போது வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அவரது ஜாக்கெட் முன்பு இருக்கும் ‘கட்' செம்ம ஹாட்டாக இருக்கிறது என கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர். மேலும், பல ரசிகர்கள் ஐ லவ் யூ என்றும், ஹார்ட்டீன்களை பறக்கவிட்டும் கியாரா அத்வானியின் அழகில் சொக்கித் தவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











