காதல் ஹீரோவுடன் ரகசிய டூர்... ஒரே லொகேஷனில் இருந்தபடி தனித்தனி போட்டோ... ஆனாலும் சிக்கிய ஹீரோயின்

By

மும்பை: பிரபல ஹீரோயின், காதல் ஹீரோவுடன் ஆப்ரிக்காவுக்கு டூர் சென்ற தகவல் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லஸ்ட் ஸ்டோரிஸ் வெப் சீரிஸ் மூலம் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த ஹீரோயின் கியாரா அத்வானி. எம்.எஸ்.தோனி படத்தில் சாக்‌ஷி தோனியாக நடித்திருந்தார்.

அர்ஜுன் ரெட்டி ரீமேக்கான கபீர் சிங் படத்தில் ஷாகித் கபூர் ஜோடியாக நடித்து அநியாயத்துக்கு முத்த மழை பொழிந்திருந்தார்.

குட் நியூஸ்

குட் நியூஸ்

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் சட்டென இடம் பிடித்துள்ள கியாரா அத்வானி, அக்‌ஷய் குமாருடன் குட் நியூஸ் படத்தில் நடித்தார். இந்த படம் ஹிட். அடுத்து காஞ்சனா ரீமேக்கான லட்சுமி பாம்ப் படத்தில் அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக மீண்டும் நடித்துவருகிறார்.

தளபதி 64

தளபதி 64

தளபதி 64 படத்தில் இவர்தான் விஜய்க்கு ஜோடி என முதலில் பேச்சு கிளம்பியது. இவரும் பிரபல இந்தி நடிகர் சித்தார்த் மல்கோத்ராவும் ஷேர்ஷா என்ற படத்தில் நடித்து வருகின்றனர். அந்தப் படப்பிடிப்பில் இருவருக்கும் காதல் பற்றிக்கொண்டதாக பாலிவுட்டில் பரபரப்பு பேச்சு நிலவி வருகிறது.

ஆப்ரிக்கா டூர்

இதுபற்றி வழக்கம் போல இருவருமே மவுனம் காத்து வருகின்றனர். இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு இருவரும் ஆப்ரிக்காவுக்கு டூர் சென்ற இவர்கள் கடந்த சில நாட்களுக்கு மும்பைக்கு ஒன்றாகத் திரும்பினர்.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

இந்நிலையில் ஆப்ரிக்காவில் இருந்து இருவரும் எடுத்துள்ள புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் தனித்தனியாகப் பதிவிட்டு வருகின்றனர். இவரின் புகைப்படங்களும் ஒரே லொகேஷனில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன என்பது அதைப் பார்த்தாலே தெரிகிறது.

என்ன ஆதாரம்

என்ன ஆதாரம்

ஆனால் இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்து பதிவிடவில்லை. அப்படி போட்டோ போட்டால், காதல் தெரிந்துவிடுமாம். இப்போது இரண்டு பேர் புகைப்படங்களை பார்த்தே, ஏம்பா, நீங்களே காண்பிச்சுக் கொடுத்தீட்டீங்க... இனும என்ன ஆதாரம் வேணும்? என்று கிண்டலடிக்கிறார்கள் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X