ஆத்தி.. என்ன டிரெஸ்ஸும்மா இது.. மெர்சிடஸ் கார் அறிமுக விழாவில் கியாரா அத்வானி.. பதறிய பாலிவுட்!
மும்பை: பாலிவுட் நடிகை கியாரா அத்வானி பிரபல ஃபேஷன் டிசைனர் ராகுல் மிஸ்ரா வடிவமைத்த ஆடைகளை அணிந்து மெர்சிடீஸ் கார் அறிமுக நிகழ்வில் ஷோஸ்டாப்பராக மேடையேறி அனைவரையும் வியக்க வைத்தார். இந்த நிகழ்ச்சி ஃபேஷன் மற்றும் ஆட்டோமொபைல் உலகங்களை ஒருங்கிணைத்த பிரம்மாண்ட நிகழ்வாக அமைந்தது.
டாக்ஸிக் படத்துக்காக காத்திருக்கும் நடிகை கியாரா அத்வானி கருப்பு நிறத்திலான அழகிய கவர்ச்சி உடையில் ரேம்பில் நடந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அவருடன் பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹரும் ஸ்டைலிஷ் தோற்றத்தில் மேடையில் தோன்றி நிகழ்வின் சிறப்பை அதிகரித்தார். இருவரின் தோற்றமும் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

ராகுல் மிஷ்ராவின் தனித்துவமான கைவினை நுட்பமும், நவீன ஃபேஷன் அணுகுமுறையும் இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக இருந்தது. மெர்சிடீஸ் நிறுவனத்தின் புதிய கார் அறிமுகத்துடன் இணைந்து நடைபெற்ற இந்த ஃபேஷன் ஷோ, ஆடம்பர வாழ்க்கை முறை மற்றும் உயர்தர வடிவமைப்புகளின் சங்கமமாக அமைந்தது.
டிரெண்டிங்கில் கியாரா அத்வானி: நிகழ்ச்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. கியாரா அத்வானி மற்றும் கரண் ஜோஹரின் ரேம்ப் வாக் ரசிகர்கள் மற்றும் ஃபேஷன் ஆர்வலர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
ஸ்லீவ்லெஸ் உடையில் கியாரா அத்வானி படு கிளாமராக நிகழ்ச்சிக்கு வந்த நிலையில், அவரை பல ஆங்கிள்களில் ஜூம் செய்து எடுக்கப்பட்ட வீடியோக்கள் பாலிவுட் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன. திருமணமாகி ஒரு குழந்தையை பெற்ற பின்னரும் இப்படி கிளாமர் குயினாக உள்ளாரே கியாரா அத்வானி என ரசிகர்கள் வாயை பிளந்துள்ளனர்.
டாக்ஸிக் என்ன ஆச்சு?: யஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் டாக்ஸிக் படத்தில் கியாரா அத்வானி "நாடியா" (Nadia) என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படக்குழு வெளியிட்ட முதல் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் கீது மோகன்தாஸ், கியாராவின் நடிப்பை மிகவும் வித்தியாசமான மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தும் நடிப்பாகப் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கியாரா அத்வானி ராம் சரண் உடன் ஷங்கர் இயக்கத்தில் நடித்த கேம் சேஞ்சர் படம் படுதோல்வியை சந்தித்தது. டாக்ஸிக் திரைப்படம் இந்த மாதம் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், படத்தில் பல காட்சிகளை யஷ் மாற்ற முடிவு செய்துள்ளார் என்றும் படம் அடுத்த ஆண்டு தான் வெளியாகும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. படக்குழு இதுவரை டாக்ஸிக் படத்தின் ரிலீஸ் குறித்து எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. கேவிஎன் நிறுவனத்துக்கு ஜன நாயகன் மற்றும் டாக்ஸிக் என 2 படங்களும் பெரிய தலைவலியாகவே மாறியுள்ளன.


Click it and Unblock the Notifications