ராசி பிரச்சினை.. ‘சுய இன்பம் சர்ச்சை’ நடிகையை தமிழுக்கு அழைத்து வரும் சிவா!
சிவாவின் புதிய படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான கியாரா அத்வானியை நாயகியாக்க முயற்சிகள் நடந்து வருகிறது.
Recommended Video
சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன் நடிக்கும் படத்தில் பிரபல பாலிவுட் நடிகையை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மிஸ்டர் லோக்கல் படத்தைத் தொடர்ந்து, பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திக்கேயன். இது தவிர விக்னேஷ் சிவன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான கியாரா அத்வானியை நாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

லஸ்ட் ஸ்டோரீஸ்:
இவர் எம்.எஸ்.தோனி படத்தில் நடித்தவர். நெட்பிலிக்ஸில் அவர் நடித்திருந்த லஸ்ட் ஸ்டோரீஸ்-ல் சுய இன்பக் காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது. அக்காட்சியை குடும்பத்துடன் சேர்ந்து பார்த்ததாக அவர் கூறியிருந்தது சர்ச்சையில் சிக்கியது.

சர்ச்சை நாயகி:
அர்ஜூன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கான கபீர் சிங்கில் இவர் தான் நாயகி. டிரெய்லரிலேயே அவரது நடிப்பை பாலிவுட் பிரபலங்கள் பாராட்டியுள்ளனர். இவரது அடுத்த படமான இந்தூ கி ஜிவானி படத் தலைப்பும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

சிவா முயற்சி:
இந்த சூழ்நிலையில் தான் தமிழில் இவரை அறிமுகப்படுத்த சிவா, விக்னேஷ் சிவன் கூட்டணி முயற்சி எடுத்து வருகிறது. நல்ல திறமையான நடிகை என்ற பெயர் பெற்ற போதும், சர்ச்சைகளுக்குப் பேர் போனவர் கியாரா.

சிவா நம்பிக்கை:
மான் கராத்தே, சீமராஜா, மிஸ்டர் லோக்கல் என தமிழின் முன்னணி நாயகிகளுடன் நடித்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால், தனது அடுத்த படத்தில் பாலிவுட் நடிகையை களமிறக்க சிவா முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. பார்ப்போம் அவரது நம்பிக்கை எந்தளவிற்கு ஒர்க் அவுட் ஆகிறது என.


Click it and Unblock the Notifications











