டாப் கியரில் கியாரா அத்வானி.. ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்தில் இத்தனை கோடி சம்பளமா?

ஹைதராபாத்: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் புதிய படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் கியாரா அத்வானியின் சம்பளம் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

ஃபக்லி படம் மூலம் கியாரா அத்வானி அறிமுகமானாலும் எம்.எஸ். தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படம் தான் பாலிவுட்டில் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்தடுத்து நடிக்க உள்ள கியாரா அத்வானி தளபதி 66 படத்திலும் ஹீரோயினாக அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தோனி படத்தில்

தோனி படத்தில்

பாலிவுட் நடிகையான கியாரா அத்வானி Fugly எனும் படத்தில் அறிமுகம் ஆனாலும், சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான MS Dhoni : The Untold Story படத்தில் தோனியின் மனைவி சாக்‌ஷி தோனியாக நடித்து தான் பிரபலமானார்.

வைப்ரேட்டர் சீன்

வைப்ரேட்டர் சீன்

நெட்பிளிக்ஸில் வெளியான ஆந்தாலஜி படமான லஸ்ட் ஸ்டோரீஸ் படத்தில் டீச்சர் மேகா கதாபாத்திரத்தில் நடித்த கியாரா அத்வானி கணவன் படுக்கையில் இன்பத்தை தராத நிலையில், வைப்ரேட்டர் பயன்படுத்துவது போன்ற படு போல்டான காட்சியில் நடித்து உலகளவில் ஃபேமஸ் ஆனார். பல முன்னணி நடிகைகளை பின்னுக்குத் தள்ளி பாலிவுட்டில் முன்னிலை வகிக்கவும் அந்த ஒரு போல்டான காட்சி இவருக்கு பெரிதும் உதவியது.

ராம்சரண், மகேஷ் பாபு

ராம்சரண், மகேஷ் பாபு

இந்தியில் இளம் நாயகியாக கலக்கி வந்த கியாரா அத்வானியை மகேஷ் பாபுவின் பரத் எனும் நான் படத்தில் புக் செய்தனர். பின்னர், ராம்சரண் நடிப்பில் வெளியான வினய விதேய ராமா படத்திலும் புக் செய்ய பாலிவுட்டை போலவே டோலிவுட்டிலும் கியாரா அத்வானி கொடி பறக்கத் தொடங்கியது.

அர்ஜுன் ரெட்டி ரீமேக்

அர்ஜுன் ரெட்டி ரீமேக்

டோலிவுட்டில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர் உடன் இணைந்து நடித்திருந்தது கியாரா அத்வானி தான். கபீர் சிங் படத்தில் ஏகப்பட்ட முத்தக் காட்சிகளில் நடித்து பாலிவுட் ரசிகர்களின் கனவுக் கன்னியாக மாறினார் கியாரா அத்வானி. அந்த படம் 400 கோடி வரை பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனை அள்ளிய நிலையில், டாப் ஹீரோயினாக மாறினார் கியாரா அத்வானி.

Recommended Video

Actress Kiara Advani: சுயஇன்பம் அனுபவிக்கும் காட்சியை பார்த்து தனது பாட்டி என்ன சொன்னார்?- வீடியோ
கியாராவை புக் பண்ண ஷங்கர்

கியாராவை புக் பண்ண ஷங்கர்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் RC15 படத்தில் மீண்டும் ராம்சரணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நடிகை கியாரா அத்வானி. இந்த படத்தின் பிரம்மாண்ட துவக்க விழா சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. ராம்சரண், கியாரா அத்வானி உள்ளிட்டோர் கோட் சூட்டில் பங்கேற்று கலக்கினர்.

கியாரா சம்பளம்

கியாரா சம்பளம்

டாப் கியரில் சினிமா உலகில் முன்னணி நடிகையாக மாறியுள்ள கியாரா அத்வானி ராம்சரணை வைத்து ஷங்கர் பிரம்மாண்டமாக இயக்கி வரும் புதிய படத்திற்கு 5 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. நடிகை நயன்தாராவே அண்ணாத்த படத்திற்கு 5 கோடி ரூபாய் தான் சம்பளமாக வாங்கி உள்ளதாக கூறப்படும் நிலையில், கியாரா அத்வானியின் மார்க்கெட் விர்ரென உயர்ந்துள்ளது.

170 கோடி பட்ஜெட்

170 கோடி பட்ஜெட்

ராஜமெளலியை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கவுள்ள பிரம்மாண்ட படத்திற்கு 200 கோடி ரூபாய் பட்ஜெட் கேட்ட ஷங்கரின் கோரிக்கையை தயாரிப்பாளர் தில் ராஜு மறுத்து விட்டதாகவும் 170 கோடி ரூபாய் பட்ஜெட்டிலேயே அந்த படத்தை முடிக்க வேண்டும் என கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆரம்பத்திலேயே பட்ஜெட் பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில், படம் முடிவதற்குள் மேலும், என்ன என்ன பிரச்சனைகள் உண்டாகுமோ தெரியவில்லையே என டோலிவுட் வட்டாரங்கள் புலம்பி வருகின்றன.

விஜய்க்கு ஜோடி

விஜய்க்கு ஜோடி

ஷங்கர் இயக்கத்தில் தொடர்ந்து இரு படங்களில் ஹீரோயினாக நடிக்கப் போகிறார் கியாரா அத்வானி என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், தளபதி 66 படத்தின் ஜோடியும் கியாரா அத்வானி தான் என்கிற பேச்சுக்களும் அடிபட்டு வருகின்றன. ஆனால், இன்னமும் தளபதி 66 ஹீரோயினை படக்குழு ஃபைனல் செய்யவில்லையாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X