நம்ம கிரணா இது? விநாயகர் சதுர்த்தியை எப்படி கொண்டாடி இருக்காங்கன்னு பாருங்க.. சோ க்யூட்!
சென்னை: கவர்ச்சி தூக்கலாக போட்டோக்களை போட்டு இன்ஸ்டாகிராமையே சூடாக்கி வந்த கிரணா இது என ஆச்சர்யப்பட வைக்கும் அளவுக்கு விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடி உள்ளார்.
கீர்த்தி சுரேஷ், ஆண்ட்ரியா, அம்ரிதா அய்யர், ஐஸ்வர்யா ராஜேஷ், வாணி போஜன், வரலக்ஷ்மி சரத்குமார் என ஏகப்பட்ட நடிகைகள் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடி உள்ளனர்.
ஆனால், அவர்களை விட நடிகை கிரண் இப்படி கலக்கலாக விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவார் என ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்காத நிலையில், அவரது போட்டோக்கள் டிரெண்டாகி வருகின்றன.

விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய கிரண்
நடிகை கிரண் தனது வீட்டில் விநாயகர் சிலையை வைத்து அவருக்கு அனைத்து விதமான பூஜைகளையும் செய்து கொழுக்கட்டை, மோதகம், பாயாசம் எல்லாம் படைத்து வழிபடும் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும், சுடிதாரில் அழகாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களையும் கிரண் தெரிவித்துள்ளார்.

ஃபுல் டிரெஸ்
நடிகை கிரண் நீண்ட நாட்களுக்குப் பிறகு சோஷியல் மீடியாவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டுத் தான் முழு உடையை அணிந்து கொண்டு போட்டோக்களை பதிவிட்டுள்ளார் என்றும், இந்த சுடிதார் உடையில் செம க்யூட்டாக இருக்கீங்க கிரண் என ஏகப்பட்ட ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

க்யூட்டான சிரிப்பு
அழகான, வண்ணமயமான விநாயகர் சதுர்த்தியில் அனைவருக்கும் என்னுடைய அன்பு கனிந்த வாழ்த்துக்கள். அனைவரும் நினைத்தது நல்லபடியாக நடக்க விநாயகர் அருள் புரிவார் என கேப்ஷன் போட்டு செம க்யூட்டாக சிரிக்கும் புகைப்படங்களை ஷேர் செய்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளார் நடிகை கிரண்.

சான்ஸ் கிடைக்கணும்
நடிகை கிரணுக்கும் சினிமாவில் நல்ல சான்ஸ் கிடைத்து மிகப்பெரிய கம்பேக் கொடுக்கணும் என ரசிகர்கள் பதிலுக்கு அவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர். சோஷியல் மீடியாவில் கவர்ச்சி உடையில் ஆட்சி செய்து வந்த கிரண் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கலக்கலாக போஸ் கொடுத்திருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











