Kiran: “சிவராத்திரி தூக்கம் ஏது“ கிரணின் விவகாரமான ஆட்டம்!

சென்னை: சினிமாவில் நிலையான ஒரு இடத்தைபெற வேண்டும் என்றாலும், பட வாய்ப்பு வர வேண்டும் என்றாலும், அதற்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்ட நடிகைகள். இணையத்தில் அவ்வப்போது விதவிதமான கவர்ச்சி போட்டோக்களையும், வீடியோக்களையும் எடுத்து பகிர்ந்து வருகின்றனர். 2000 காலக்கட்டத்தில் டாப் நடிகையாக திகழ்ந்த நடிகை கிரணுக்கு தற்போது பட வாய்ப்பு இல்லாததால், இன்ஸ்டாகிராமை குத்தகைக்கு எடுத்துக்கொண்டு, கவர்ச்சி தாண்டவர் ஆடி வருகிறார்.

கோலிவுட்டில் டாப் நடிகர்களாக இருக்கும் கமல்ஹாசன், விக்ரம், அஜித் உள்ளிட்டோருடன் ஜோடி போட்டு நடித்தவர் தான் நடிகை கிரண் ராத்தோட். மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை கிரண், இந்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, ஜெமினி படத்தில் ஹீரோயினாக நடித்தார். அந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழில் அன்பே சிவம், வின்னர், வில்லன் போன்ற நடித்து வந்தார். இவர் தமிழில் படம் மட்டுமல்ல சில இந்தி மொழி ஆல்பம் பாடல்களிலும் நடித்திருக்கிறார்.

Kiran glamour photos
Photo Credit:

நடிகை கிரண்: பீக்கில் இருந்த கிரண் ரத்தோர் ஒருவரை காதலித்து வந்தார். அந்த காதலன் கைவிட்டு சென்றுவிட்டதால், காதல் தோல்வியால் மன அழுத்தத்தில் இருந்த இவர், சினிமாவில் கவனம் செலுத்தாமல் இருந்தார். அந்த நேரத்தில் அவருக்கு நல்ல படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது அதை அவர் தவறவிட்டுள்ளார். கில்லி படத்தில் த்ரிஷாவின் கதாப்பாத்திரத்தில் நடிக்க முதலில் என்னிடம் தான் கேட்டார்கள். ஆனால், காதல் தோல்வியால் மன அழுத்தத்தில் இருந்ததால், வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அன்று நான் ஒரு தவறான முடிவை எடுத்துவிட்டேன் என பேட்டியில் கூறியிருந்தார். ஆனால், நடிகை கிரண், வாய்ப்பு தேடி அலைந்தும் அதுவரவில்லை. இதைத்தொடர்ந்து, விஜய்யின் திருமலை படத்தில் வாடியம்மா ஜெக்கம்மா பாடலுக்கு கவர்ச்சி நடனமாடி இருந்தார். தெலுங்கிலும் கூட சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருக்கிறார். நடிகை கிரணுக்கு சரியான பட வாய்ப்புகள் அமையாததால், ஹீரோயினாக நடித்து வந்த இவர், ஆம்பள படத்தில் அம்மாவாக நடித்தார்.

சிவராத்திரி தூக்கம் ஏது: படமும் இல்லை, வருமானமும் இல்லாததால், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி வீடியோ மற்றும் போட்டோவை வெளியிட்டு வந்தார். இதைத்தொடர்ந்து, தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார். அங்கேயும் இவரால் தாக்கு பிடிக்க முடியாமல் வந்தார். தற்போது நடிகை கிரண், வனிதா விஜயகுமார் மற்றும் ராபர்ட் மாஸ்டர் நடித்து இருக்கும் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் படத்தில் ஒரு ரோலில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ஜூலை 11ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இந்த படத்திலும், "சிவராத்திரி தூக்கம் ஏது" என்ற பாடலுக்கு புடவையில் ஓவர் கவர்ச்சி காட்டி ஆட்டம் போட்டுள்ளார். தற்போது, நடிகை கிரண் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டி டவுசர் அணிந்து கொண்டு, மொத்த அழகையும் காட்டி கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார். அந்த போட்டோவிற்கு ஒரு சிலர் லைக்குகளை குவித்து இதயத்தை பரிசளித்து வருகின்றனர். நடிகை கிரணை இன்ஸ்டாகிராமில் மட்டும், மூன்று புள்ளி ஐந்து மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். இதன் மூலம் நடிகை கிரண் வருமானத்தை ஈட்டி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X