ஹீரோயின்
சான்சுக்காக சகல வழிகளிலும் முயன்று பார்த்து விட்ட கிரண் தற்போது தனது கடைசி முயற்சியாக இயக்குனர்சரணிடம், சரணடைய முடிவு செய்துள்ளார்.
சரணின் ஜெமினி மூலம் கோலிவுட்டில் மையம் கொண்ட கிரண் என்ற கவர்ச்சிப் புயல் இப்போது வலுவிழந்து,வாய்ப்பிழந்து நிற்கிறது. வின்னர் படத்தில் வரலாறு காணாத அளவுக்கு கவர்ச்சி காட்டியும், வேலைக்குஆகவில்லை.
நியூ படத்தைத் தவிர வேறு புதிய படம் அவரது கையில் இல்லை. இந்தப் படத்திலும் அவரது ரோல் எடுத்து
முடிக்கப்பட்டுவிட்டது.
இதனால் தனக்கு வழி காட்டிய சரணிடமே சரணடைய முடிவு செய்து அவரது அடுத்த படத்தில் தனக்கு ஒருவாய்ப்பு வழங்குமாறு அனத்தி எடுத்து வருகிறாராம் கிரண். இதற்காக நேரில் வந்து கெஞ்சியதோடு, இப்போதுராஜஸ்தானில் உள்ள தனது சொந்த ஊரில் இருந்து போனிலும் தொல்லைப்படுத்தி வருகிறாரம்.
ஆனால், ஜெமினியில் அறிமுகமான கிரணாக இல்லாமல், கிரேன் வைத்துத் தூக்கும் அளவுக்கு உப்பி விட்டதால்,கிரணுக்கு எப்படி வாய்ப்புத் தருவது என்று குழம்பிப் போய் இருக்கிறாராம் சரண்.


Click it and Unblock the Notifications











