என்னை அடித்தார்.. டார்ச்சர் செய்து ஆடைகளை கிழித்துவிட்டேன்.. காதலன் பற்றி மனம் திறந்த கிரண்
சென்னை: ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமான கிரண் கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். கண்டிப்பாக பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அவருக்கான பட வாய்ப்புகள் சட்டென்று குறைய ஆரம்பித்து ஒருகட்டத்தில் ஆள் காணாமல் போய்விட்டார். இதனையடுத்து ஆம்பள உள்ளிட்ட படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தார்.
கோலிவுட்டுக்கு மும்பை உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்துதான் ஹீரோயின்கள் வருவது வழக்கமாகியிருந்தது. ஜோதிகா, சிம்ரன்,நமீதா என அந்தப் பட்டியல் நீளும். இப்போதும் மும்பையிலிருந்து குறிப்பிட்டு சொல்லும்படி கதாநாயகிகள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அந்தவகையில் வட மாநிலத்திலிருந்து கோலிவுட்டுக்கு வந்த நடிகைதான் கிரண் ரத்தோட். பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்தவர் தமிழில் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானார். சரண் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்த அந்தப் படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியானது.

அடுத்தடுத்த பட வாய்ப்புகள்: பக்கா ஆக்ஷன் கமர்ஷியல் படமாக உருவான ஜெமினி அதிரிபுதிரி ஹிட்டடித்தது. முதல் படமே மெகா ஹிட்டானதால் அறிமுகமாகியிருந்த கிரணுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. அதனை சரியாகவும் பயன்படுத்திக்கொண்டார். இருந்தாலும் கிரண் ஒரு கிளாமர் ஹீரோயின் என்ற முத்திரை மட்டும் அவரை விட்டு விலகாமல் இருந்தது. அதை மாற்றுவதற்கு ஒரு படத்துக்காக காத்திருந்தார் கிரண்.
அன்பே சிவம்: அப்படிப்பட்ட சூழலில்தான் சுந்தர் சி இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவான அன்பே சிவம் திரைப்படம். இன்றுவரை கல்ட் க்ளாசிக் படமாக அன்பே சிவம் கொண்டாடப்படுகிறது. அப்படத்தில் கிரண் கமிட்டானதும் அக்காலகட்டத்தில் பலரும் ஆச்சரியம்தான் பட்டனர். ஆனால் நீங்கள் எல்லாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை என்பதுபோல் தனது நடிப்பில் அதகளம் செய்திருந்தார் கிரண். தொடர்ந்து அஜித்துடன் வில்லன், பிரசாந்த்துடன் வின்னர் படங்களில் நடித்த அவருக்கு மார்க்கெட் சட்டென சரிந்தது.
ஓரங்கட்டப்பட்ட கிரண்: மார்க்கெட் சரிந்ததை அடுத்து ஒரு சில படங்களில் நடித்த அவர் விஜய்யுடன் திருமலையில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். அதன் பிறகு முழுவதுமாக ஒதுங்கியிருந்த அவர் சுந்தர் சியின் ஆம்பள படத்தில் நடித்தார். இப்போது எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருக்கும் அவர்; ஆப் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் பணம் சம்பாதித்துவருகிறார். அந்த ஆப்பும் ஒரு விவகாரமான ஆப் என்றே பலராலும் கூறப்படுகிறது.
கிரண் அளித்த பேட்டி: இந்நிலையில் அவர் சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், ""எனது காதலன் என்னை விட்டு ஓடிவிட்டான். நான் என் காதலனை சித்ரவதை செய்தேன். ஏனெனில் அவன் ஒருமுறை என்னை கன்னத்தில் அறைந்துவிட்டான். என்னால் அதை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. எப்படி அவன் என் மீது கை வைக்கலாம் என்ற எண்ணம்தான் ஓடிக்கொண்டே இருந்தது.
ஆடைகளை கிழித்தேன்: ஒரு முறை அவன் இரவில் என்னை பார்க்க வேண்டும் என்று அழைத்தான். நானும் சென்றிருந்தேன். அப்போது அவனது ஆடைகளை கிழித்தேன். மேலும் என்னை அடிக்க உனக்கு எவ்வளவு தைரியம் என்று சொல்லிக்கொண்டே கிழித்தேன். அவன் ஆடையின்றி அங்கிருந்து சென்றான். சினிமாவில் எனக்கு யாரும் நண்பர்கள் இல்லை. எல்லோரும் என்னை பயன்படுத்திக்கொள்ளத்தான் செய்தார்கள்"”என்றார்.


Click it and Unblock the Notifications











