அன்பே சிவம் பாடலை இன்னமும் மறக்காத கிரண்.. ஸ்லீவ் லெஸ்ஸில் செம ஹாட்டா இருக்காரே!
சென்னை: நடிகை கிரண் அன்பே சிவம் பாடல் வரிகளை பதிவிட்டு, தனது லேட்டஸ்ட் லுக்கையும் வெளியிட்டுள்ளார்.
வில்லன், ஜெமினி, அன்பே சிவம் உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளைக் கொண்ட நடிகை கிரண், ட்விட்டரில் தனது புதிய புகைப்படங்களையும், ஊரடங்கு உத்தரவு குறித்தும் பதிவிட்டுள்ளார்.
கைகளை சுத்தமா கழுவுங்க
தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நாயகியாக நடித்து அசத்தியவர் நடிகை கிரண். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, அனைவரும் சுய ஊரடங்கை 21 நாட்களுக்கு கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார். கைகளை சுத்தமாக கழுவுங்க என வீடியோ போட்டும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
அன்பே சிவம் பாடல்
21 நாட்கள் லாக் டவுனை தான் வீட்டில் எப்படி கடக்கிறேன் என்பதை போட்டோக்களாகவும், வீடியோக்களாகவும் நடிகை கிரண் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், அன்பே சிவம் படத்தில் வரும் "பூவாசம் புறப்படும் தென்றல்" பாடல் வரிகளான, "உயிரல்லதெல்லாம் உயிர்கொள்ளும் என்றால் உயிருள்ள நானோ என்னாகுவேன்" என்ற வரிகளை நினைவு கூர்ந்துள்ளார்.

ஸ்லீவ் லெஸ்
தனது புது ஹேர்ஸ்டைல் உடன் செம ஹாட்டாக கவர்ச்சி கடல் பொங்க நடிகை கிரண் போஸ்ட் போட்டுள்ளார். ஸ்லீவ் லெஸ் உடையில், தனது முன்னழகு எடுப்பாக தெரியும் படி கிரண் பதிவிட்டுள்ள கிளாமர் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த வயசில எப்படி இவ்ளோ ஹாட்டாக இருக்கீங்க என வாயை பிளந்து வருகின்றனர்.
சிங்கிளா
39வயதாகும் நடிகை கிரண் தான் இன்னும் சிங்கிளாக இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஹீரோயினாக நடித்து வந்த கிரண், விஷாலின் ஆம்பள, சுந்தர்.சியின் முத்தின கத்திரிக்காய், இளமை ஊஞ்சல் உள்ளிட்ட படங்களில் கம்பேக் கொடுத்துள்ளார். சந்தானத்தின் ரிலீஸாகாத சர்வர் சுந்தரம் படத்திலும் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











