ஜிகு ஜிகு உடையில் முன்னாள் ஹீரோயின்.. பிக் பாஸுக்கு நீங்க வந்திருக்கலாம்.ஏக்கமாக கேட்கும் ஃபேன்ஸ்

By

சென்னை: ஜிகு ஜிகு கலரில் உடையணிந்து நடிகை கிரண் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

கடந்த சில மாதங்களாக, இன்ஸ்டாவில் இஷ்டத்துக்கு போட்டோவாக போட்டுத் தாக்கி வருகிறார் நடிகை கிரண்.

சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்த 'ஜெமினி' படம் மூலம் ஹீரோயின் ஆனாரே, அவரேதான்!

வின்னர் நாயகி

வின்னர் நாயகி

பிறகு அஜித்தின் வில்லன், கமலின் அன்பே சிவம், சரத்குமாரின் திவான், பிரஷாந்த் நடித்த வின்னர் உட்பட பல படங்களில் நடித்தார். வின்னர் படம், இப்போது வரை வடிவேலு காமெடிக்காக பேசப்பட்டு வந்தாலும் நடிகை கிரணின் நடிப்பும் கிளாமரும் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.

டைஹார்ட் ஃபேன்ஸ்

டைஹார்ட் ஃபேன்ஸ்

இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் நடித்து வந்த இவர், இப்போது கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார். முன்னாள் ஹீரோயின் ஆகிவிட்ட கிரணுக்கு இப்போதும் டைஹார்ட் ஃபேன்ஸ் இருக்கிறார்கள். அவர்களை அடிக்கடி சோசியல் மீடியாவில் மெயின்டெயின் பண்ணிக்கொண்டிருக்கிறார்.

என் தங்கமே என

என் தங்கமே என

அவர் ஒரு போட்டோ பதிவு செய்தால் லட்சக்கணக்கான ரசிகர்கள், என் தங்கமே என்று ஓடி வந்துவிடுகின்றனர். அவர்கள் கொடுக்கிற ரியாக்‌ஷன்களை அதிகமாக ரசிக்கிறார். அதற்காகவோ என்னவோ, அவரை அப்படி புகழ்ந்து தள்ளுகிறார்கள் ரசிகர்கள்.

தமிழ் பிக் பாஸ்

தமிழ் பிக் பாஸ்

இடையில், தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க இருப்பதாக செய்திகள் வெளியாயின. சோசியல் மீடியாவிலும் ரசிகர்கள் இதுபற்றி பேசி வந்தனர். ஆனால், தான் அதில் பங்கேற்கவில்லை என்று அவர் கூறியிருந்தார். இதனால் ஏமாற்றமடைந்ததாக ரசிகர்கள் சிலர் தெரிவித்தனர்.

ஜிகு ஜிகு உடை

ஜிகு ஜிகு உடை

இந்நிலையில், இப்போது ஜிகு ஜிகு கலர் உடையில் புதிய ஸ்டில் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கும் குவிந்திருக்கிறது லட்சக்கணக்கான, விருப்பங்கள். கிச்சு கிச்சு மற்றும் அச்சச்சோ கமென்ட்களும் ஏராளமான வந்து விழுந்துள்ளன. ஆரம்பத்தில் சிலர் கமென்ட்களுக்கு பதில் சொல்லி வந்த கிரண், இப்போது கப்சிப்.

வேறலெவல் தலைவிடா

வேறலெவல் தலைவிடா

சில நெட்டிசன்ஸ், நீங்க ஏன் பிக் பாஸ்க்கு வரலை? என்றும் நீங்களும் வந்திருக்கலாம் என்றும் ஏக்கமாக கூறியுள்ளனர். இது வேற லெவல் தலைவிடா என்று சில பாசக்கார ஃபேன்ஸ் வழிந்துள்ளனர். ஒரு சிலர், இந்த டிரெஸ் அருமையா, ஹாலிவுட் ஸ்டைல்ல இருக்கு என கூறியுள்ளனர்.

அமுக்கு டுமுக்கு

அமுக்கு டுமுக்கு

பலர் அவர் அழகை அப்படி இப்படி அநியாயத்துக்கு வர்ணித்துள்ளனர். சிலர் அவர் ஒரு ஹாய் சொல்லுங்களேன் என்று கேட்டுள்ளனர். ஒருவர், அமுக்கு டுமுக்கு அமால் துமால் எனக் கூறியுள்ளார். நடிகை கிரணின் இந்தப் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X