twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மீண்டும் கிரண், ஹீரோயினாக! துள்ளுவதோ இளமையைப் போல இன்னொரு குஜால் படத்தை இயக்கப் போகிறார் கஸ்தூரிராஜா. அதில் கிரண் புகுந்துவிளையாட இருக்கிறார்.ஏகப்பட்ட கடன், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கஸ்தூரிராஜா தயாரித்து இயக்கிய துள்ளுவதோ இளமை அவருக்குபெரும் லாபத்தை சம்பாதித்துக் கொடுத்தது. கடன்களை அடைத்து நிமிர அவருக்கு பெரும் உதவியாக இருந்தது.அத்தோடு இல்லாமல் தனுஷ், செல்வராகவனுக்கும் இப்படம் தமிழ் திரையுலகில் ஒரு இடம் அமைத்துக் கொடுத்தது.முற்றிலும் டீன் ஏஜ் இளசுகளை குறி வைத்து எடுக்கப்பட்ட படம் துள்ளுவதோ இளமை. பெரும் சர்ச்சையையும்,விமர்சனத்தையும் சந்தித்தாலும் கூட கஸ்தூரிராஜாவின் குடும்பத்தைக் காப்பாற்றிய படம் துள்ளுவதோ இளமை.கிட்டத்தட்ட அதே டைப்பில் இப்போது மீண்டும் ஒரு படம் எடுக்கப் போகிறார் கஸ்தூரி. இந்தப் படத்தை தனது மகள் டாக்டர்விமலகீதா பெயரில் தயாரிக்கிறார். படத்தை இயக்கப் போவதும் அவர்தான்.இதில் இன்னொரு விஷயம், படத்திற்கு இசையமைக்கப் போவதும் கஸ்தூரிராஜாவே தான். அவர் இசையமைக்கும் முதல் படம்இது தான்.படத்தில் இரண்டு ஹீரோக்கள். ஹரீஷ் குமார் என்ற புதுமுகத்தையும், ம்பையைச் சேர்ந்த மாடல் ஒருவரையும்ஹீரோக்களாக அறிமுகம் செய்கிறார்.ஹீரோயினாக கிரணை புக் செய்துள்ளார். இவர் தவிர மேலும் இரண்டு மும்பை இளசுகளையும் களத்தில் இறக்கி விடவுள்ளார்.படத்திற்கு இது காதல் வரும் பருவம் என்று பெயர் வைத்துள்ளார் கஸ்தூரி ராஜா.விடலைப் பருவ காதலை விலாவாரியாக இதில் விளக்கவுள்ளாராம். கிரண் முற்றிலும் வித்தியாசமான அதே சமயம் இளமைகொப்பளிக்கும் வேடத்தில் வருகிறாராம். நடிப்பை விட கவர்ச்சியே பிரதானமாகத் தேவை என்று சொல்லியே கிரணுக்குஅட்வான்ஸ் தரப்பட்டிருக்கிறது.இன்றைய இளசுகளுக்கேற்ற வகையில் வசனங்கள் எழுதும் பாலகுமாரனே இப்படத்திற்கும் வசனம் எழுதவுள்ளார். வைரமுத்துபாடல்களை எழுதுகிறார். சென்னையில் தொடங்கி லண்டனிலும் சில காட்சிகளை படமாக்க உள்ளார்களாம்.படத்தில் இன்னொரு சிறப்பம்சம், மும்பையிலிருந்து 20 மாடல் அழகிகளை வரவழைத்து அட்டகாசமான பாடல் காட்சியைப்படமாக்கவிருக்கிறார்கள். படம் முழுவதும் கிளாமரும், இளமை கொந்தளிப்பும் விரவிக் கிடக்கும் வகையில் கதையைஅமைத்துள்ளாராம் கஸ்தூரி.கிரண் பற்றி இன்னொரு தகவல். தமிழில் அதிக படங்கள் இல்லாததால் சென்னை நகர ஹோட்டல்களில் வார இறுதியில் கெட்டஆட்டம் போட்டு வரும் கிரண் இப்போது இந்தியில் சில படங்களில் ஒத்தப் பாட்டுக்கு புக் ஆகி புயலைக் கிளப்பி வருகிறார்.இந்தப் புதிய படத்தின் மூலம் தமிழில் இன்னொரு ரவுண்டு வர முடிவு செய்திருக்கும் அவர், முடிஞ்சவரை தனது கவர்ச்சியைபயன்படுத்திக் கொள்ளுமாறு கஸ்தூரியிடம் கூறி விட்டாராம்.இது போதாதா கஸ்தூரி ராஜாவுக்கு?

    By Staff
    |

    துள்ளுவதோ இளமையைப் போல இன்னொரு குஜால் படத்தை இயக்கப் போகிறார் கஸ்தூரிராஜா. அதில் கிரண் புகுந்துவிளையாட இருக்கிறார்.

    ஏகப்பட்ட கடன், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கஸ்தூரிராஜா தயாரித்து இயக்கிய துள்ளுவதோ இளமை அவருக்குபெரும் லாபத்தை சம்பாதித்துக் கொடுத்தது. கடன்களை அடைத்து நிமிர அவருக்கு பெரும் உதவியாக இருந்தது.

    அத்தோடு இல்லாமல் தனுஷ், செல்வராகவனுக்கும் இப்படம் தமிழ் திரையுலகில் ஒரு இடம் அமைத்துக் கொடுத்தது.

    முற்றிலும் டீன் ஏஜ் இளசுகளை குறி வைத்து எடுக்கப்பட்ட படம் துள்ளுவதோ இளமை. பெரும் சர்ச்சையையும்,விமர்சனத்தையும் சந்தித்தாலும் கூட கஸ்தூரிராஜாவின் குடும்பத்தைக் காப்பாற்றிய படம் துள்ளுவதோ இளமை.

    கிட்டத்தட்ட அதே டைப்பில் இப்போது மீண்டும் ஒரு படம் எடுக்கப் போகிறார் கஸ்தூரி. இந்தப் படத்தை தனது மகள் டாக்டர்விமலகீதா பெயரில் தயாரிக்கிறார். படத்தை இயக்கப் போவதும் அவர்தான்.


    இதில் இன்னொரு விஷயம், படத்திற்கு இசையமைக்கப் போவதும் கஸ்தூரிராஜாவே தான். அவர் இசையமைக்கும் முதல் படம்இது தான்.

    படத்தில் இரண்டு ஹீரோக்கள். ஹரீஷ் குமார் என்ற புதுமுகத்தையும், ம்பையைச் சேர்ந்த மாடல் ஒருவரையும்ஹீரோக்களாக அறிமுகம் செய்கிறார்.

    ஹீரோயினாக கிரணை புக் செய்துள்ளார். இவர் தவிர மேலும் இரண்டு மும்பை இளசுகளையும் களத்தில் இறக்கி விடவுள்ளார்.

    படத்திற்கு இது காதல் வரும் பருவம் என்று பெயர் வைத்துள்ளார் கஸ்தூரி ராஜா.

    விடலைப் பருவ காதலை விலாவாரியாக இதில் விளக்கவுள்ளாராம். கிரண் முற்றிலும் வித்தியாசமான அதே சமயம் இளமைகொப்பளிக்கும் வேடத்தில் வருகிறாராம். நடிப்பை விட கவர்ச்சியே பிரதானமாகத் தேவை என்று சொல்லியே கிரணுக்குஅட்வான்ஸ் தரப்பட்டிருக்கிறது.


    இன்றைய இளசுகளுக்கேற்ற வகையில் வசனங்கள் எழுதும் பாலகுமாரனே இப்படத்திற்கும் வசனம் எழுதவுள்ளார். வைரமுத்துபாடல்களை எழுதுகிறார். சென்னையில் தொடங்கி லண்டனிலும் சில காட்சிகளை படமாக்க உள்ளார்களாம்.

    படத்தில் இன்னொரு சிறப்பம்சம், மும்பையிலிருந்து 20 மாடல் அழகிகளை வரவழைத்து அட்டகாசமான பாடல் காட்சியைப்படமாக்கவிருக்கிறார்கள். படம் முழுவதும் கிளாமரும், இளமை கொந்தளிப்பும் விரவிக் கிடக்கும் வகையில் கதையைஅமைத்துள்ளாராம் கஸ்தூரி.


    கிரண் பற்றி இன்னொரு தகவல். தமிழில் அதிக படங்கள் இல்லாததால் சென்னை நகர ஹோட்டல்களில் வார இறுதியில் கெட்டஆட்டம் போட்டு வரும் கிரண் இப்போது இந்தியில் சில படங்களில் ஒத்தப் பாட்டுக்கு புக் ஆகி புயலைக் கிளப்பி வருகிறார்.

    இந்தப் புதிய படத்தின் மூலம் தமிழில் இன்னொரு ரவுண்டு வர முடிவு செய்திருக்கும் அவர், முடிஞ்சவரை தனது கவர்ச்சியைபயன்படுத்திக் கொள்ளுமாறு கஸ்தூரியிடம் கூறி விட்டாராம்.

    இது போதாதா கஸ்தூரி ராஜாவுக்கு?

      Read more about: kiran is back as heroine
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X