»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

முன்னணி நடிகைகளின் லேட்டஸ்ட் பாணியான சிங்கிள் டான்சுக்கு வந்துவிட்டார் கிரண்.

இளம் நடிகர்களுடன் மட்டுமே நடித்து வந்த கிரண், அன்பே சிவம் படத்தில் கமலுடன் ஜோடி சேர்ந்தார்.

இதையடுத்து மூத்த நடிகர்களிடம் இருந்து அவருக்கு நிறைய அழைப்புகள் வர ஆரம்பித்துள்ளன. அர்ஜூனுடன்சேர்ந்து பரசுராம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந் நிலையில் சரத்குமாரின் படத்தில் சிங்கிள் டான்சுக்கு அழைக்க எந்தத் தயக்கமும் காட்டாமல் போய் ஆடிவிட்டுவந்திருக்கிறார்.

சூப்பர் குட் பிலிம்ஸ் செளத்ரியும் அவரது நண்பரும் இணைந்து தயாரிக்கும் அரசு என்ற படத்தில் சரத்குமாருக்குஇரட்டை வேடமாம். ஒரு சரத்குமாருக்கு சிம்ரனும் இன்னொரு சரத்குமாருக்கு ரோஜாவும் ஜோடியாம்.

இதில் சரத்குமாருடன் ஒரே ஒரு பாட்டுக்கு மட்டும் கவர்ச்சி சொட்ட சொட்ட ஆட்டம் போட்டுள்ளார் கிரண்.இதற்காக கிரணுக்கு தரப்பட்ட துட்டு ரூ. 10 லட்சமாம் !. ஆளான தேகம் எங்கும் ஆண் வாசனை என்றுதொடங்கும் அந்தப் பாடலுக்கு கிரண் போட்டிருக்கும் ஆட்டம் தான் படத்தில் ஹை-லைட்டாக இருக்கும்என்கிறார்கள் கோடம்பாக்கம் குருவிகள்.

தன் படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டே அடுத்த படத்தில் போய் ஒரு பாட்டுக்கு டான்ஸ் போட்டதால்அர்ஜூன் கடுப்படைந்துவிட்டாரம். இது குறித்து கிரணிடம் கேள்வி கேட்க, படாரென அவரிடம் இருந்து பதில்வந்ததாம்.

காசு சார்.. காசு.. நீங்க சும்மா 10 லட்சம் ரூபாய் தருவீங்களா என்று கேட்டு அர்ஜூனின் வாயை அடைத்தாராம்கிரண்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil