ஹீரோயின்
ஜெமினி படம் சூப்பர் ஹிட் ஆனதைத் தொடர்ந்து, கிரணுக்கு வாய்ப்புகள் குவிந்தன.
தமிழ் ரசிகர்களுக்கு குஷ்பு மாதிரி கொழுக் மொழுக் நடிகைகளைத்தான் பிடிக்கும் என்று யாரோ சொன்னதைக்கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, தனது தொப்பையை உரமூட்டி வளர்த்தார் கிரண்.
தனது தொப்பையோடு கமல், அஜீத், அர்ஜூன், பிரசாந்த் என்று ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு, திரும்பிப் பார்த்தால்அம்மணிக்கு ஒரு படமும் கைவசம் இல்லை.
வாய்ப்பு எதுவும் இல்லாமல் ஜெயப்பூருக்கே போய் வீட்டில் சும்மா இருக்கும் நடிகை கிரண் மேலும் ஊதிப்பெருத்துவிட்டார். இதனால் கிடைக்கும் ரோல்களில் நடித்து முடிந்தவரை பணம் ஈட்ட முடிவு செய்துள்ளார்.
தமிழில் தீவிரமாய் முயன்றும் திருமலையில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் போட மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மற்றபடிபாச்சா பலிக்கவில்லை. இதனால் தெலுங்குப் பக்கம் மூட்டை கட்டலாமா என்று யோசித்து வருகிறார். இதற்காககாண்ட்ராக்ட் அடிப்படையில் மேனேஜர் ஒருவரைப் பிடித்துப் போட்டுள்ளார்.
சான்ஸ் வாங்கித் தந்தால் அந்தப் படத்தில் கிடைக்கும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட பர்சன்டேஜ் அவருக்குத்தருவாராம்.
தெலுங்கு திரையுலகுக்குப் பிடித்த மாதிரி அபாய கட்டத்துக்கு கவர்ச்சி காட்டி, அந்த ஸ்டில்களை மேனேஜர்மூலமாக தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் அனுப்பி வைத்திருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











