twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கஸ்தூரிராஜா படத்தில் கிரண் தமிழ் சினிமாவில் இருந்து விரட்டப்பட்ட கிரணுக்கு அபயக் கரம் தந்துள்ளார் தனுசின் அப்பா கஸ்தூரிராஜா. அவரது இயக்கத்தில்உருவாகும் இது காதல் வரும் பருவம் என்ற படத்தில் மீண்டும் ஹீரோயினாக நடிக்கிறார்.பல நல்ல படங்களை இயக்கியிருந்தாலும் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் (செல்வராகவன் உதவியுடன்) தான்பிரபலமானார் கஸ்தூரிராஜா. அந்தப் படம் இவருக்கு மட்டுமல்லாமல் மகன் தனுசுக்கும் பெரிய வாழ்க்கையை உருவாக்கித்தந்தது.அந்தப் படத்தை பேக்கிரவுண்டில் இருந்து இயக்கிய அவரது மூத்த மகன் செல்வராகவன் இன்று முன்னணி இயக்குனராகிவிட்டார்.துள்ளுவதோ இளமை என்னவோ உவ்வே ரக படமாக இருந்தாலும் அடுத்தடுத்து நல்ல படங்களைத் தயாரித்தார்கஸ்தூரிராஜா. தனுஷ் நடிக்க செல்வா இயக்க இவர் தயாரித்த காதல் கொண்டேன் நல்ல பெயர் வாங்கியது.இப்போது தனது விமலகீதா-ஆர்.கே. புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் மூலம் மிகப் பிரமாண்டமான முறையில் "இது காதல் வரும்பருவம் என்ற படத்தைத் தயாரித்து இயக்குகிறார் கஸ்தூரிராஜா.இதில் ஹரீஷ்குமார் என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவரும் தனுஷ் மாதிரியே தான் நோஞ்சானாக இருக்கிறார்.இதில் மேலும் ஒரு ஹீரோவும் இரு மும்பை பார்ட்டிகள் ஹீரோயின்களாகவும் அறிமுகமாகிறார்கள்.படத்தில் இத்தனை பேர் இருந்தாலும் முக்கிய ரோலில், மெயின் கதாநாயகியாக நடிக்கப் போவது கிரண். இது 13க்கும் 15க்கும்இடைப்பட்ட வயதில் உருவாகும் டீன் ஏஜ் சங்கதிகளின் கதையாம் (இன்னொரு துள்ளுவதோ இளமையாப்பா?, தாங்குமாய்யாதமிழ் சினிமா).இளவட்ட வாலிபர்கள் இருவர், இரு டீன் ஏஜ் தேவதைகள், இவர்களுக்கு இடையே நுழையும் கிரணின் சல்லாபம் தான்கதையாம். படத்துககு வசனம் பாலகுமாரனால் எழுதப்படுகிறது. வைரமுத்து பாடல்கள் எழுதவுள்ளார். படத்தில் முக்கியமான விஷேசம்என்ன தெரியுமா?. இதற்கு இசையமைக்கப் போவது கஸ்தூரி ராஜாவே தான்.பகவானே, எதுக்கு இந்த ரிஸ்கோ?சூட்டிங் சென்னையில் தொடங்கிவிட்டது. அடுத்து மும்பை, லண்டனில் நடக்கப் போகிறது. படம் பிப்வரியில் ரிலீசாம்.

    By Staff
    |

    தமிழ் சினிமாவில் இருந்து விரட்டப்பட்ட கிரணுக்கு அபயக் கரம் தந்துள்ளார் தனுசின் அப்பா கஸ்தூரிராஜா. அவரது இயக்கத்தில்உருவாகும் இது காதல் வரும் பருவம் என்ற படத்தில் மீண்டும் ஹீரோயினாக நடிக்கிறார்.

    பல நல்ல படங்களை இயக்கியிருந்தாலும் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் (செல்வராகவன் உதவியுடன்) தான்பிரபலமானார் கஸ்தூரிராஜா. அந்தப் படம் இவருக்கு மட்டுமல்லாமல் மகன் தனுசுக்கும் பெரிய வாழ்க்கையை உருவாக்கித்தந்தது.

    அந்தப் படத்தை பேக்கிரவுண்டில் இருந்து இயக்கிய அவரது மூத்த மகன் செல்வராகவன் இன்று முன்னணி இயக்குனராகிவிட்டார்.

    துள்ளுவதோ இளமை என்னவோ உவ்வே ரக படமாக இருந்தாலும் அடுத்தடுத்து நல்ல படங்களைத் தயாரித்தார்கஸ்தூரிராஜா. தனுஷ் நடிக்க செல்வா இயக்க இவர் தயாரித்த காதல் கொண்டேன் நல்ல பெயர் வாங்கியது.

    இப்போது தனது விமலகீதா-ஆர்.கே. புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் மூலம் மிகப் பிரமாண்டமான முறையில் "இது காதல் வரும்பருவம் என்ற படத்தைத் தயாரித்து இயக்குகிறார் கஸ்தூரிராஜா.

    இதில் ஹரீஷ்குமார் என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவரும் தனுஷ் மாதிரியே தான் நோஞ்சானாக இருக்கிறார்.இதில் மேலும் ஒரு ஹீரோவும் இரு மும்பை பார்ட்டிகள் ஹீரோயின்களாகவும் அறிமுகமாகிறார்கள்.

    படத்தில் இத்தனை பேர் இருந்தாலும் முக்கிய ரோலில், மெயின் கதாநாயகியாக நடிக்கப் போவது கிரண். இது 13க்கும் 15க்கும்இடைப்பட்ட வயதில் உருவாகும் டீன் ஏஜ் சங்கதிகளின் கதையாம் (இன்னொரு துள்ளுவதோ இளமையாப்பா?, தாங்குமாய்யாதமிழ் சினிமா).

    இளவட்ட வாலிபர்கள் இருவர், இரு டீன் ஏஜ் தேவதைகள், இவர்களுக்கு இடையே நுழையும் கிரணின் சல்லாபம் தான்கதையாம்.


    படத்துககு வசனம் பாலகுமாரனால் எழுதப்படுகிறது. வைரமுத்து பாடல்கள் எழுதவுள்ளார். படத்தில் முக்கியமான விஷேசம்என்ன தெரியுமா?. இதற்கு இசையமைக்கப் போவது கஸ்தூரி ராஜாவே தான்.

    பகவானே, எதுக்கு இந்த ரிஸ்கோ?

    சூட்டிங் சென்னையில் தொடங்கிவிட்டது. அடுத்து மும்பை, லண்டனில் நடக்கப் போகிறது. படம் பிப்வரியில் ரிலீசாம்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X