முத்தம் கேட்டு பூஜாவை துரத்தும் ரசிகர்கள்…
மேடைக்கு மேடை முத்தம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்துவது நடிகை பூஜா ஸ்டைல். அவரது இந்த முத்தப் பழக்கம் நடிகையை சிக்கலில் சிக்கவைத்து விட்டதாம். அவர் போகும் இடங்களில் எல்லாம் ரசிகர்கள் முத்தம் கேட்டு துரத்த ஆரம்பித்து விட்டனராம். இதனால் செய்வதறியாமல் தவிக்கிறார் நடிகை.

ஜே ஜே அறிமுகம்
2003-ல் ஜே ஜே என்ற படத்தில்தான் அறிமுகமான பூஜா, தமிழ், தெலுங்கு, மலையாளம், சிங்களம், என இதுவரை 25 படங்கள் வரை நடித்துள்ளார்.

நான் கடவுள் படத்தில்
பாலாவின் நான் கடவுள் படத்திற்குப் பின்னர் படிப்படியாக படவாய்ப்புகள் குறையவே, தமிழில் இருந்து இடம்பெயர்ந்து சிங்கள மொழியில் நடிக்கத் தொடங்கிவிட்டார்.

அதுக்கு சரிப்படுவாரா?
குத்தாட்டம் ஆடுவதற்கு ரெடி என்றாலும் வாய்ப்புகள் பெரிதாக கதவைத் தட்டவில்லை. கதாநாயகியாக நடிக்கும் படங்களில் கவர்ச்சிக்கு தடை போட்டு நடித்து வந்ததால், இவர் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்று இயக்குநர்கள் நினைக்கின்றனராம்.

அக்கா, அண்ணி
33 வயதாகிவிட்டது. அக்கா, அண்ணி கதாபாத்திரங்களில் நடிக்கவும் தயார் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் பூஜா.

முத்தத் துரத்தல்
மேடை ஏறும் இடமெங்கும் ஹீரோவுக்கு முத்தம் கொடுப்பது நடிகையின் வழக்கம். விருது நிகழ்ச்சியில் கூட முத்தம் கொடுக்க சென்ற போது ஓடிப்போனார் ஒரு இசையமைப்பாளர்.

அன்பா கொடுப்பேன்
இப்போது நிறைய பேர் பூஜாவிடம் முத்தம் கேட்டு துரத்துகின்றனராம். அன்பா கேட்டா முத்தம் கொடுப்பேன் என்று அதிரடி ஸ்டேட் மெண்ட் விடுத்துள்ளார் பூஜா.


Click it and Unblock the Notifications











