தமிழ் சினிமாவின் டபுள் கோடீஸ்வரிகள் யார்னு தெரியுமா...??

By Sudha

சென்னை: தமிழ் சினிமா முன்பு போல இல்லை. படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் நடிகர் நடிகையரின் சம்பளம் மட்டும் குறைவதே இல்லை. அது பாட்டுக்கு ஏறிக் கொண்டேதான் போகிறது.

முன்பு ஹீரோக்களுக்குத்தான் கொட்டிக் கொடுத்தார்கள். இப்போது ஹீரோயின்களும் கோடீஸ்ர சம்பளப் பட்டியலில் சேர்ந்துள்ளனர்.

ஆனால் ஹீரோக்களுடன் ஒப்பிடுகையில், ஹீரோயின்களுக்கு மிக மிக மட்டமான சம்பளத்தைத்தான் நமது கோலிவுட் முதலாளிகள் கொடுக்கிறார்கள்.. ஆணாதிக்க சமுதாயமாச்சே..

நம்ம ஊர் நாயகிகள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்று இண்டஸ்ட்ரியில் உலா வரும் தகவல்களின் அடிப்படையில் ஒரு பருந்துப் பார்வை...

2 கோடி நயனதாரா

2 கோடி நயனதாரா

நயனதாராவுக்கு தமிழில் சுத்தமாக மார்க்கெட் இல்லை என்பதுதான் நிதர்சனம். ஆனால் கிராக்கிக்கு சற்றும் குறைவில்லையாம். இவர்தான் தமிழில் இப்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகையாம். அதாவது 2 கோடிக்கு இவரை லேட்டஸ்டாக உதயநிதிஸ்டாலின் நடிக்கும் கதிர்வேலன் காதலி படத்திற்கு புக் செய்தனராம்.

ஒன்றரை அனுஷ்கா

ஒன்றரை அனுஷ்கா

ரெண்டு படம் தமிழுக்கு வந்தவரான அனுஷ்கா 2வது இடத்தில் இருக்கிறார். இவரது சம்பளம் ஒன்றரை கோடியாம்.

நேற்று வந்த காஜலுக்கு ஒரு கோடியா...!

நேற்று வந்த காஜலுக்கு ஒரு கோடியா...!

கடைசியாக நடித்த துப்பாக்கி படத்திற்கு ரூ. 70 லட்சம் வாங்கியவரான காஜல் அகர்வால், இப்போது ஒரு கோடி தாங்கோ என்று குரலை உசத்திக் கேட்கிறாராம். தெலுங்கில் மட்டும் நீக்குப் போக்காக நடந்து கொள்கிறாராம்.

கோடிக்குக் கீழே திரிஷா

கோடிக்குக் கீழே திரிஷா

ரொம்ப வருஷமாக பீல்டில் இருந்தாலும் திரிஷாவின் சம்பளம் கோடிகளை எட்டவில்லையாம். மார்க்கெட் நிலையாக இல்லாததும் இதற்கு ஒரு காரணம் என்கிறார்கள். கடைசியாக இவர் சமர் படத்துக்கு வாங்கிய சம்பளம் ரூ. 60 லட்சம் மட்டும்தான்.

கமல் மகளுக்கு ஒரு கோடி

கமல் மகளுக்கு ஒரு கோடி

கமல்ஹாசனின் மகளான ஸ்ருதி ஹாசன் தற்போது ரூ. 1 கோடி வரை சம்பளம் கேட்பதாக தெரிகிறது. தெலுங்கில் ஓடிய கப்பார் சிங் ஹிட்டடித்ததால் இந்த சம்பள உயர்வாம்.

ஒன்றுமே இல்லாத தமன்னாவுக்கு 70 லட்சம்

ஒன்றுமே இல்லாத தமன்னாவுக்கு 70 லட்சம்

தமிழில் சுத்தமாக மார்க்கெட் இல்லை என்ற நிலையில் இருந்தாலும் கூட தமன்னாவின் சம்பளம் சற்றும் குறைந்தது போலத் தெரியவில்லை. அவர் கடைசியாக அஜீத் படத்திற்காக ரூ. 70 லட்சம் கேட்டாராம்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X