தமிழ்நாட்டில் இளவரசி மாதிரி பார்த்துக் கொள்கிறார்கள்: காஜல் அகர்வால்

By Mayura Akilan

அழகு தேவதையாக மிளிரும் காஜல் அகர்வாலுக்கு ஐஸ்கிரீம், ஸ்வீட்ஸ் ரொம்ப பிடிக்குமாம். (அதான் பேரிலேயே அகர்வால் இருக்கே அப்புறம் என்ன?)இப்போது டயட்டில் இருப்பதால் அவற்றை சாப்பிடாமல் கஷ்டப்பட்டு நிறுத்தி வைத்திருக்கிறாராம்.

பாரதிராஜாவை உதாசீனப்படுத்தினார் என்ற புகாரை அடுத்து, பாரதிராஜா திட்ட அதற்கு காஜல் சமாதானப்படுத்த என்று மீடியாக்களில் செய்திகள் அடிபட்டன. ஆனால் நான் அப்படி சொல்லவே இல்லை என்னால் யாரையும் உதாசீனப்படுத்தவோ வெறுக்கவோ முடியாது என்று கூறி பாரதிராஜாவை கூல் செய்துள்ளார் காஜல் அகர்வால்.

இந்தி சிங்கம் படத்தில் அஜய் தேவ்கானுடன் ஜோடி, துப்பாக்கி வெற்றிக்குப் பின்னர் தமிழில் ஆல் இன் ஆல் அழகுராஜா, என அசத்தி வருகிறார் காஜல் அகர்வால்... நடிப்பிலும் வேறு விசயங்களிலும் காஜல் அகர்வாலுக்கு அப்படி என்னதால் பிடிக்கும் என்று நைசாக விசாரணை செய்தபோது கிடைத்த தகவல்கள் சுவாரஸ்யமானவை படியுங்களேன்.

27 வயது பட்டாம் பூச்சி

27 வயது பட்டாம் பூச்சி

காஜல் அகர்வால் பிறந்த தேதி ஜூன் 16 1985. மாடலாக தொடங்கி நடிகையாக வெற்றி பெற்றுள்ளார். மகதீரா படம்தான் அவரின் சினிமா கேரியரை உயர்த்தியது.

காலேஜ் ரவுடியாக்கும்

காலேஜ் ரவுடியாக்கும்

மும்பையில் கல்லூரியில் படிக்கும் போது டிபார்ட்மென்ட் செகரட்டரியாம். எல்லோரும் பயப்படுவார்களாம்.

இளவரசி மாதிரி இருக்கிறேன்

இளவரசி மாதிரி இருக்கிறேன்

இங்கே தமிழ்நாட்டில் நடிக்க வந்த பின்னர் இளவரசி மாதிரி பார்த்துக்கொள்கிறார்கள். பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று ஐஸ்வைக்கிறார்.

பாலிவுட் ரீ எண்ட்ரி

பாலிவுட் ரீ எண்ட்ரி

பாலிவுட் படத்தில் ஏற்கனவே அறிமுகம் ஆகியிருந்தாலும் இப்போது ஹீரோயினாக சிங்கம் படத்தில் களம் இறங்கி வெற்றி பெற்றிருக்கிறார்.

லிப் லாக் கொடுக்கலாமே

லிப் லாக் கொடுக்கலாமே

காட்சிக்கு தேவை என்றால் லிப் லாக் சீன்களில் நடிப்பேன் என்று கூறும் காஜல், லூட்டி அடிக்கும் நாட்டியான ரோலில்தான் அதிகம் நடிக்க விரும்புகிறார்.

ஐஸ்கிரீம், சுவீட் மிஸ்பண்றேன்

ஐஸ்கிரீம், சுவீட் மிஸ்பண்றேன்

முன்பெல்லாம் ஐஸ்கிரீம், சுவீட் அதிகம் சாப்பிடுவாராம். பஞ்சாபில் உள்ள பாட்டி வீட்டு சுவீட்தான் பேவரைட். ஆனால் இப்போது டயட்டில் இருப்பதால் அதை மிஸ் செய்கிறாராம்.

நான் பயங்கர சோம்பேறி

நான் பயங்கர சோம்பேறி

முன்பெல்லாம் படுக்கையில் இருந்து எழுவதற்கு 10 மணியாகிவிடும் அந்த அளவிற்கு சோம்பேறி. இப்போது சூட்டிங் இருப்பதால் 5 மணிக்கு தயாராகிவிடுகிறாராம்.

அடுத்த ஹீரோயின் ரெடி

அடுத்த ஹீரோயின் ரெடி

காஜல் அகர்வாலின் வீட்டில் இருந்தே அடுத்த ஹீரோயின் ரெடியாகிவிட்டார் அவர் வேறு யாருமல்ல காஜலின் தங்கை நிஷாதான். அவர் காஜல் அகர்வாலை விட அழகு என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X