உள்ளாடையுடன் ஒய்யாரமாக நிற்கும் அனுஷ்கா ஷர்மா.. கோலி முதல் ஆலியா பட் வரை மெய் மறந்து பாராட்டு!

மும்பை: வோக் இதழுக்காக எடுக்கப்பட்ட ஒட்டுமொத்த கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்களையும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் களமிறக்கி உள்ளார் நடிகை அனுஷ்கா ஷர்மா.

Recommended Video

V-CONNECT | ACTRESS KOMAL SHARMA CHAT | என்னோட VOICE அப்பிடித்தான் | FILMIBEAT TAMIL

இத்தனை நாள் கவர்ச்சி காட்டாமல், கட்டுக்கோப்பாக இருந்த அவர், தனது ஹாட்டான அத்தனை புகைப்படங்களையும் தற்போது வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

லாக்டவுன் முடியட்டும் மீண்டும் பாலிவுட்டில் நம்பர் ஒன் நாயகியாக மாறி காட்டுகிறேன் என்கிற ரேஞ்சில் அதகளம் பண்ணி வருகிறார்.

வோக் இதழுக்காக

வோக் இதழுக்காக

பிரபல ஃபேஷன் இதழான வோக் இதழின் இம்மாத அட்டைப் பட அழகியாக பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா தேர்வாகி உள்ளார். அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல, இதுவரை 5 அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை அந்த இதழுக்காக எடுத்த போட்டோஷூட்டில் இருந்து பதிவிட்டு, ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

உள்ளாடையுடன் ஒய்யாரமாக நின்று

உள்ளாடையுடன் ஒய்யாரமாக நின்று

வோக் இந்தியா கவர் போட்டோவிற்காக, கருப்பு வெள்ளை உள்ளாடை அணிந்து கொண்டு, மேலே, மஞ்சள் நிறத்தில் சல்லடையாக தெரியும் படி ஏகப்பட்ட ஓட்டைகளுடன் இருக்கும் மேலாடை ஒன்றை போட்டது போன்றே இல்லாமல் இருக்கும் ஆடையுடன் ஒய்யாரமாக நின்றபடி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படம் இணையத்தின் ஹீட்டை அதிகரித்து இருக்கிறது.

கடல் கன்னி

கடல் கன்னி

முன்னழகும், தொடையழகும் தெரியும் படி செம செக்ஸியாக கடலில் அமர்ந்தபடி கடல் கன்னியை போல காட்சியளிக்கும் மற்றொரு வோக்யூ இதழுக்கான ஹாட் அட்டைப் படத்தையும் நடிகை அனுஷ்கா ஷர்மா, சற்று முன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்படி செம போல்டாக போட்டோக்களை போட்டு வரும் அனுஷ்காவை அவரது ரசிகர்கள் ஹார்ட்டீன்களால் குளிர வைத்து வருகின்றனர்.

லைக் போட்ட கணவர்

லைக் போட்ட கணவர்

நேற்று முதலே தனது வித விதமான கவர் போட்டோவுக்கு போஸ் கொடுத்த புகைப்படங்களை பதிவிட்டு, பாலிவுட் பிரபலங்களை மட்டுமின்றி, தனது கணவர் கிரிக்கெட் வீரர் விராத் கோலியையும் கிறங்கடித்து வருகிறார் நடிகை அனுஷ்கா ஷர்மா. அவரது அழகை பார்த்து வர்ணிக்க வார்த்தை வராமல், எமோஜிகளை போட்டே எஸ்கேப் ஆகி வருகிறார் கோலி.

ஆலியா பட் பாராட்டு

ஆலியா பட் பாராட்டு

அனுஷ்கா ஷர்மாவின் ஒவ்வொரு புகைப்படங்களும் 2 மில்லியன் லைக்களுக்கும் மேல் அள்ளியுள்ள நிலையில், பாலிவுட் பிரபலங்களான மெளனி ராய், ஊர்வசி ரவுத்தேலா உள்ளிட்ட பலர் வாய் பிளந்து அவரது அழகை ரசித்து வருகின்றனர். பாலிவுட்டின் இளம் முன்னணி நடிகை ஆலியா பாட், "Such a beauty" என கமெண்ட் செய்துள்ளார்.

தயாரிப்பில் பிசி

தயாரிப்பில் பிசி

கடந்த 2018ம் ஆண்டு 4 படங்களில் நடித்திருந்த நடிகை அனுஷ்கா ஷர்மா, அதற்கு பிறகு புதுப் படங்களில் ஏதும் ஒப்பந்தம் ஆகவில்லை. சமீபத்தில் அவரது தயாரிப்பில் வெளியான பதால் லோக் வெப்சீரிஸ் அமேசானில் சக்கைப் போடு போட்டு வர, நெட்பிளிக்ஸில் அவரது தயாரிப்பில் உருவான புல்புல் பேய் படம் பாராட்டுக்களை அள்ளி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X