எனக்கு அந்த நெனப்பாவே இருக்கு... கவலையில் நடிகை அஞ்சலி!

சென்னை : நடிகை அஞ்சலி முதல் முறையாக இரண்டு வேடங்களில் பாவக் கதைகள் படத்தில் நடித்து இருந்தார்.

தமிழ்,மலையாளம்,கன்னடம்,தெலுங்கு என தென்னிந்தியாவை கலக்கி வரும் இவர் இப்போது தமிழில் பூச்சாண்டி படத்தில் நடித்து வருகிறார்.

பிட்னஸ் மீது எப்போதும் தீவிர ஆர்வம் கொண்ட அஞ்சலி இப்போது ஜிம்மில் ஒர்க்கவுட் செய்துவிட்டு உட்கார்ந்தவாறு எனக்கு அந்த நெனப்பாவே இருக்கு என கூறியிருக்கிறார்.

துணிச்சலான பல கதாபாத்திரம்

துணிச்சலான பல கதாபாத்திரம்

தெலுங்கு சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டு இப்பொழுது தமிழில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை அஞ்சலி ராமின் கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டதால் அடுத்தடுத்து நடிக்கும் ஒவ்வொரு திரைப் படங்களும் ரசிகர்களின் கவனத்தை பெற்றது. குறிப்பாக கற்றது தமிழ் படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்ற இவர் இப்போது முன்னணி நடிகையாக துணிச்சலான பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து பிரமாதப்படுத்தி வருகிறார்.

எதார்த்தமான நடிப்பை

எதார்த்தமான நடிப்பை

இதுவரை ஒரு ரோல் கதாபாத்திரத்தில் நடித்து வந்த அஞ்சலி முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்து கலக்கியிருந்த பாவக்கதைகள் திரைப்படத்தில் லவ் பண்ணா உட்ரனும் என்ற பாகத்தில் நடித்திருந்தார். இயக்குனர் விக்னேஷ் சிவன் அதை இயக்கி இருந்தார். தமிழைத் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களிலும் விருதுகளை நிச்சயமாக வெல்லும் அளவிற்கு எதார்த்தமான நடிப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.

அதனால் கைகூடவில்லை

அதனால் கைகூடவில்லை

அவ்வப்போது அரைகுறை ஆடையில் புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சைகளிலும் சிக்கி வரும் அஞ்சலி எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தபோது நடிகர் ஜெய்யுடன் காதலில் இருந்ததாகவும் அந்த காதல் இரு வீட்டாருக்கும் பிடிக்கவில்லை அதனால் கைகூடவில்லை எனவும் சொல்லப்படுகிறது. அதிகாரபூர்வமாக இவரது காதல் விவகாரம் வெளியில் அறிவிக்கப்படவில்லை என்றாலும் இருவரும் இன்றும் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

வடிவேலு பாணியில் கலாய்த்து

வடிவேலு பாணியில் கலாய்த்து

என்றும் இளமையுடன் இருக்க பிட்னஸ்ஸில் மிகுந்த கவனம் செலுத்திவரும் அஞ்சலி உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருக்க ஜிம்மில் ஒர்க்கவுட் செய்துவிட்டு குந்த வைத்து உட்கார்ந்தவாறு எனக்கு பிரேக் ஃபாஸ்ட் மீது நினைப்பாகவே இருக்கிறது என கூறியிருக்க அதை பார்த்த ரசிகர்கள் எப்ப பார்த்தாலும் சோறு சோறு சோறு என வடிவேலு பாணியில் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X