கோலிவுட் நடிகையையும் விடாத கொரோனா வைரஸ்.. பரபரப்பு போஸ்ட். இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?
சென்னை: ஹாலிவுட், பாலிவுட் நடிகைகளை பதம் பார்த்த நிலையில், தற்போது கோலிவுட் நடிகையையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.
டார்லிங், கலகலப்பு 2, மொட்ட சிவா கெட்ட சிவா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை நிக்கி கல்ராணிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம்.
கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கும் மேலாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதாக தற்போது பரபரப்பாக ஒரு போஸ்ட் போட்டுள்ளார்.

நிக்கி கல்ராணிக்கு கொரோனா
கடந்த 2014ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான '1983' படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. மலையாளம், கன்னட திரைப்படங்களில் நடித்து வந்த அவர், ஜி.வி. பிரகாஷ் ஹீரோவாக நடித்த டார்லிங் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தற்போது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார்.

ஒரு வாரமாக
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும் கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என வந்ததாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பரபரப்பு போஸ்ட் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார் நடிகை நிக்கி கல்ராணி. அவரது இந்த போஸ்ட்டை பார்த்தவுடன் ரசிகர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

எப்படி இருக்காரு?
மேலும், தனது ட்வீட்டில் தெளிவாகத் தனக்கு தற்போது எந்தவொரு பாதிப்பும் இல்லை என்றும், கொரோனா பரவலில் இருந்து தான் குணமாகி வருவதாகவும், ரசிகர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும், ஆனால், பெற்றோர்களின் வயதையும், உடல்நிலையும் இளைஞர்கள் கருத்தில் கொண்டு எப்போதுமே மாஸ்க் அணிந்து வெளியில் செல்ல வேண்டும் என்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை மருத்துவர்களுக்கு நன்றி
சென்னையில் கொரொனா பரவல் அதிகமாகி வருகிறது என்ற செய்தியை தினந்தோறும் கேட்டு வருகிறோம். அத்தனை நோயாளிகளையும் கடுமையாக போராடி சென்னை மக்களை மருத்துவர்கள் காப்பாற்றி வருகின்றனர். தன்னையும் கொரோனாவில் இருந்து காப்பாற்றி வரும் சென்னை மருத்துவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார் நிக்கி கல்ராணி.


Click it and Unblock the Notifications











