இப்படி ஒரு அழகை பார்த்ததே இல்லை...ராய் லட்சுமியை பிகினியில் பார்த்து உறைந்து போன ரசிகர்கள்!
சென்னை : நடிகை ராய் லட்சுமி கிளுகிளுப்பூட்டும் பிகினியில் கலக்கலாக போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.
இந்த புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வரும் நிலையில், ராய் லட்சுமியின் ரசிகர்கள் அதை ஜொள்ளுவிட்டு பார்த்து வருகின்றனர்.
மாடல் அழகியான ராய் லட்சுமி சினிமாத்துறையில் நுழைவதற்கு முன்பு, புரூ காஃபி விளம்பரத்திலும், சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர் அண்ட் லவ்லி விளம்பரத்திலும் நடித்துள்ளார். இந்த விளம்பரங்களில் கிடைத்த வரவேற்பை அடுத்தே இவர் சினிமாவில் நுழைந்தார்.

ராய் லட்சுமி
ஆர்.வி உதயக்குமார் இயக்கத்தில் உருவான கற்க கசடற திரைப்படத்தில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்தார் ராய் லட்சுமி. ஆனால் இப்படம் சரியான வரவேற்பை பெறாமல் தோல்வியடைந்ததால், பட வாய்ப்புக்காக தெலுங்கு பக்கம் சென்றார் இவர், காஞ்சனா கேபிள் டிவி என்ற திரைப்படத்தில் நடித்தார்.

படவாய்ப்பு இல்லை
பட வாய்ப்புக்காக அங்கேயே வாசம் செய்த ராய் லட்சுமி, மலையாளம், கன்னடம் படங்களில் நடித்தார். இருப்பினும் எந்த படமும் இவருக்கு பெயரை பெற்றுத்தராததால் கிடைத்த வேடத்தில் நடித்து வந்தார். இதையடுத்து, தாம்தூம், முத்திரை, வாமனன், நான் அவன் இல்லை2, ஒரு காதலன் ஒரு காதலி என தமிழில் அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தமானார்.

கவர்ச்சியில் தாறுமாறு
திறமை இருந்தும் சரியாக கதைகளை தேர்வு செய்யாததால் அவரால் சினிமாவில் உயரத்தை தொட முடியாததால், நடிகைகளின் கடைசி ஆயுதமான கவர்ச்சியை கையில் எடுத்த ராய் லட்சுமி, பல திரைப்படங்களில் கவர்ச்சி குயினாக வலம் வர ஆரம்பித்தார். காஞ்சனா படத்தில் அரைகுறை ஆடையுடன் வந்து படம் முழுக்க ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

சிவப்பு பிகினியில்
இந்நிலையில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ராய் லட்சுமி விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். ராய் லட்சுமி தற்போது சிவப்பு நிற பிகினில் தாறுமாறாக போஸ் கொடுத்துள்ளார். ராய் லட்சுமியின் இந்த கிளுகிளு போட்டோவை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளுவிட்டு லைக்குகளை குவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











