கட்டிலில் படுத்து உருண்டு..தாராள கவர்ச்சி காட்டிய ஸ்ரேயா சரண்..விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை : நடிகை ஸ்ரேயா சரண் கட்டிலில் படுத்து உருண்டு தாராளமாக கவர்ச்சி காட்டி உள்ளார்.
விஜய், ரஜினிகாந்த், தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்த ஸ்ரேயா சரண், பட வாய்ப்புகள் இல்லாததால் இணையத்தை திணறடிக்கும் வகையில் ஹாட் பேபியாக மாறியுள்ளார்.
சமீபத்தில் பிங்க் நிற புடவையில் உள்ளாடை எதுவும் அணியாமல் மொத்த முதுகையும் காட்டி எடுத்திருந்த போட்டோ ரசிகர்களை திக்குமுக்காட வைத்தது.

நடிகை ஸ்ரேயா சரண்
தென்னிந்தியாவில் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரேயா சரண் நடிப்பு மட்டுமல்லாமல் நடனம் கவர்ச்சி என அனைத்திலும் அடித்து தூள் கிளப்பி முன்னணி நடிகையாக வலம் வந்தவர். குறிப்பாக விஜய், ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகைகளின் திரைப்படங்களில் நடித்து அனைவரையும் கொள்ளை கொண்ட இவருக்கு மழை திரைப்படம் மிகப்பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது.

பல ஹிட் மூவீஸ்
சிவாஜி, திருவிளையாடல் ஆரம்பம், அழகிய தமிழ்மகன், குட்டி, கந்தசாமி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வெற்றிக் கொடியை பறக்க விட்டு வந்த ஸ்ரேயா இடையில் சில படங்களில் ஒரு சில பாடலுக்கு குத்தாட்டம் போட்டு சென்றார். பல திரைப்படங்களில் முன்னணியாக நடித்தப்பிறகும், பட வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது கிடைத்த வேடத்தில் நடித்து வருகிறார்.

அதெல்லாம் நல்லாவா இருக்கு
திருமணத்திற்குப் பிறகு கணவருடன் செம ரொமான்டிக்கான க்யூட் படங்களையும், கவர்ச்சியில் ரணகளப்படுத்தும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள ஸ்ரேயா, கட்டிலில் படுத்து உருண்டு விவகாரமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் படவாய்ப்பு இல்லை என்பதற்காக இப்படியா என்றும், வரவர நீங்கள் கிரணுக்கு போட்டியாக கவர்ச்சி போட்டோவை பதிவிடுகிறீர்கள் அதெல்லாம் நல்லாவா இருக்கு என்று கேட்டு வருகின்றனர்.

கைவசம் உள்ள மனம்
தமிழில் கமனம், சண்டக்காரி, நரகாசுரன் ஆகிய திரைப்படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. கப்ஸா, த்ரிஷ்யம் 2 (இந்தி) உள்ளிட்ட படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. கன்னடத்தில் உருவாகி உள்ள காப்ஸா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் ஸ்ரேயா. இந்த ஆண்டு வெளியான பிரம்மாண்டமான படமான ஆர்ஆர்ஆர் படத்திலும் அஜய் தேவ்கனுக்கு மனைவியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











