மயில், ரோஜா, சங்கு… நடிகைகள் குத்திய டாட்டூ

By Mayura Akilan

சென்னை: சமீபகாலமாக நடிகர், நடிகைகள் டாட்டூ என்று சொல்லப்படும் பச்சை குத்திக்கொள்வது அதிகமாகி வருகிறது. தங்களது பெயர், காதலன் பெயர், வித்தியாசமான படங்கள் என நடிகர், நடிகைகள் உடம்பில் பல்வேறு இடங்களில் டாட்டூ குத்தி வருகின்றனர்.

கோலிவுட்டைப் பொறுத்தவரை, குஷ்பூ, த்ரிஷா, ப்ரியாமணி, நயன்தாரா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய இடம் பிடிக்கிறார்கள். அந்த டாட்டூக்கள் நடிகைகளுக்குக் கூடுதல் கவர்ச்சியைத் தருகிறது

த்ரிஷாவின் கிளாமர் டாட்டூ

த்ரிஷாவின் கிளாமர் டாட்டூ

த்ரிஷா தனது கழுத்துக்கு சற்று கீழே நெஞ்சுக்கு சற்று மேலே ஒரு டாட்டூவை ரொம்ப நாளாக வைத்திருக்கிறார். சில படங்களில் அவர் இறக்கமாக டிரஸ் அணியுமபோது அந்த டாட்டூ வெளியில் எட்டிப்பார்க்கும்.

லக்கி டாட்டூ

லக்கி டாட்டூ

தனது விருப்பமான கார்ட்டூன் கேரக்டரான நீமோவை டாட்டூ போட்டுக் கொண்ட த்ரிஷாவுக்கு அது ரொம்பவே லக்கியாம்! கணுக்கால் ஏரியாவிலும், கையிலும் கூட இப்போது டாட்டூ வரைந்துள்ளார்.

நயன்தாராவின் சிங்கம்

நயன்தாராவின் சிங்கம்

அதேபோல், நயன்தாரா, தனது மாஜி காதலரான பிரபுதேவாவின் பெயரை தனது வலது கையில் டாட்டூ வரைந்திருக்கிறார். அதேபோல், இடை, தொடை என்று சில டாட்டூக்களை வரைந்து வைத்திருக்கிறார். இடையில் சிங்கத்தை வரைந்துள்ளார்.

குஷ்புவின் மயில்

குஷ்புவின் மயில்

நடிகை குஷ்பு தனது நாட்டுப்பற்றை வெளிப்படுத்த நமது தேசிய பறவையான மயிலை தனது முதுகில் பச்சை குத்தியுள்ளார்.

மகள்களின் பெயர்கள்

மகள்களின் பெயர்கள்

வலக்கையில் பட்டாம்பூச்சி, இடது கையில் தனது மகள்கள் அவந்திகா, அனந்திகாவின் பெயர்களை தமிழ், ஆங்கிலம் கலந்து எழுதியிருக்கிற டாட்டூ என சமீப காலமாக கவனம் ஈர்க்கிறார் நடிகை குஷ்பு.

நமீதாவும் நட்சத்திரங்களும்

நமீதாவும் நட்சத்திரங்களும்

சினிமாவில் சான்ஸ் கிடைப்பதற்காக ஜோதிடர் ஒருவரின் ஆலோசனைப்படி நமீதா தனது முதுகில் 27 நட்சத்திரங்களை பச்சைக்குத்தியுள்ளார்.

ஸ்ருதியின் ரோஜா

ஸ்ருதியின் ரோஜா

நடிகை ஸ்ருதிஹாசன் உடம்பில் ஆங்காங்கே தனக்கு பிடித்த மலர்கள், நிலா, நட்சத்திரம் என உடம்பெங்கும் அதாவது, உள்ளங்காலை மட்டும் தவிர்த்து விட்டு அனைத்து பகுதிகளிலும ஏதாவது ஒரு டாட்டூவை வரைந்து வைத்திருக்கிறார் தனது பெயரை முதுகில் தமிழில் பச்சை குத்தியுள்ளார் ஸ்ருதிஹாசன். சமீபத்தில் மணிக்கட்டில் ரோஜாவை வரைந்துள்ளார்.

ரோஜாவின் டாட்டூ

ரோஜாவின் டாட்டூ

நடிகையும், அரசியல்வாதியுமான ரோஜா தனது அழகான டாட்டூவை மார்பில் குத்தியுள்ளார்.

வரலட்சுமி சரத்குமார்

வரலட்சுமி சரத்குமார்

முதுகில் ஒன்றும், கணுக்காலில் ஒன்றுமாக 2 டாட்டூக்களுக்கு சொந்தக்காரர் நடிகை வரலட்சுமி சரத்குமார். சமீபத்தில் கையில் ஒன்றை குத்தியுள்ளாராம்.

பிரியாமணி

பிரியாமணி

நடிகை பிரியாமணி இடது கை மணிக்கட்டுக்கு கீழே அழகாய் டாட்டூ வரைந்துள்ளார். தவிர இடது மார்பகத்தின் மேலே, வலது தோள்பட்டை என வரைந்து அசத்துகிறார்.

அசின்

அசின்

நடிகை அசின் வலது கையில் தோள்பட்டைக்கு கீழே குட்டியாக வரைந்துள்ளார்.

ரியா சென்

ரியா சென்

அதேபோல நடிகை ரியா சென் அழகான கொடி ஒன்றை மார்பின் மேற்பகுதியில் வரைந்துள்ளார்.

டாட்டூமோகம்

டாட்டூமோகம்

நரிக்குறவ இனத்தவர்களின் கைவந்த கலையாக இருந்த பச்சைக்குத்துவதுதான் இன்றைக்கு டாட்டூவாக நவீன அவதாரமெடுத்திருக்கிறது. இளையோர் மத்தியில் டாட்டூ கலாசாரம் தீயாகப் பற்றி எரிய, வழக்கம்போல சினிமா நட்சத்திரங்களே காரணமாக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X