»   »  நயன்தாரா முதல் ஹன்சிகா வரை... சைஸ் ஜீரோ மோகம்

நயன்தாரா முதல் ஹன்சிகா வரை... சைஸ் ஜீரோ மோகம்

By Mayura Akilan
Subscribe to Oneindia Tamil

சிக்ஸ் பேக்ஸ்... 8 பேக்ஸ் என நடிகர்களை ஆட்டிவைத்த மோகம் போல நடிகைகளை ஜீரோ சைஸ் மோகம் பீடித்துள்ளது.

கொழு கொழு நடிகைகளைத்தான் தென்னக ரசிகர்களுக்கு பிடிக்கும் என்றாலும் ஒரு சில படங்களோடு ஓரங்கட்டப்படுவிடுவோம். தெலுங்கு, இந்தி என ஜெயிக்க சைஸ் ஜீரோதான் சரிப்பட்டு வரும் என்று நினைக்கின்றனர் நடிகைகள்.

எனவேதான் உடலில் தேவையற்ற இடங்களில் உள்ள கொழுப்புகளை கரைத்தும்... டயட்டில் இருந்தும் ஜீரோ சைஸ்க்கு மாறத்துடிக்கின்றனர். ஜீரோ சைஸ் சிலருக்கு சரிப்பட்டு வரும். சில நடிகைகள் சோர்ந்து ஓய்ந்து போய்விடுவார்கள். சைஸ் ஜீரோவிற்கு மாறி ஜெயித்த நடிகைகள் பற்றியும், மாறத்துடிக்கும் நடிகைகள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்களேன்.

நயன்தாரா

நயன்தாரா

ஐயா படத்தில் நடித்தபோது கொஞ்சம் புஷ்டியாகத்தான் இருந்தார் நயன்தாரா. பின்னர் உடலை இளைத்து பில்லா படத்தில் பிகினியில் நடித்தார் நயன்தாரா.

அசின்

அசின்

தமிழ் படங்களில் நடித்தபோது அசின் அழகாகத்தான் இருந்தார். பாலிவுட் படத்தில் நடிக்கப் போய் ஜீரோ சைஸ் ஆனார். பின்னர் காவலன் படத்தில் விஜய் உடன் நடித்த அசின் அவ்வளவாக சோபிக்க வில்லை.

இலியானா

இலியானா

தெலுங்கு நடிகை இலியானாவிற்கு கொடி இடையாள் என்ற பட்டப் பெயரே கொடுத்திருக்கின்றனர் அவரது ரசிகர்கள் ஆனால் தமிழக ரசிகர்களிடம் ஜீரோ சைஸ் எடுபடவில்லை.

தமன்னா

தமன்னா

தமன்னாவிற்கு ஜீரோ சைஸ் அழகுதான் என்றாலும் அவரும் சில படங்களோடு ஓரங்கட்டப்பட்டு விட்டார்.

ஹன்சிகா மோத்வானி

ஹன்சிகா மோத்வானி

அறிமுகமாகும் போது குட்டி குஷ்பு என்று அழைக்கப்பட்டவர் ஹன்சிகா மோத்வானி. தற்போது உடல் இளைத்து ஜீரோ சைஸ் ஆக மாறியுள்ளார். ஆனால் ஹன்சிகா மோத்வானி கொழு கொழுவென இருந்தபோது இருந்த மோகம், அவர் இளைத்த பிறகு குறைந்திருப்பதாக சொல்கிறது ஒரு புள்ளிவிபரம்.

லட்சுமி மேனன்

லட்சுமி மேனன்

குடும்பப்பாங்கான கிராமத்து கதாபாத்திரங்களில் நடிக்கும் லட்சுமி மேனனுக்கு ஜீரோ சைஸ் ஆசை எட்டிப் பார்த்துள்ளதாம். இதைக் கேள்விப்பட்ட அவரது சினிமா தோழிகள், உடம்பு இளைக்கும் போது கண்களுக்கு சோர்வு வரும் என்று எச்சரிக்கவே அதை மனதிருந்து தூக்கி எறிந்து விட்டாராம்.

கரீனா கபூர் – கத்ரீனா கைப்

கரீனா கபூர் – கத்ரீனா கைப்

பாலிவுட் பட உலகில் ஜீரோ சைஸ் என்ற டிரென்டினை அறிமுகம் செய்தவர் கரீனா கபூர். இவரை அடுத்து கத்ரீனா கைப் சைஸ் ஜீரோவாக மாறினார்.

சிம்ரன்

சிம்ரன்

இடுப்பழகி சிம்ரன் ஜீரோ சைஸ் ஆனபின்னர் இடுப்பை ஆட்டி அவர் ஆடிய நடனம் ரசிகர்களிடையே வரவேற்பினை பெற்றது. திருமணம் குழந்தை என்று செட்டிலான அவர் சில காலம் குண்டாக இருந்தார். இப்போது மீண்டும் சைஸ் ஹீரோவிற்கு மாறிவிட்டார்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

உலக அழகி ஐஸ்வர்யா குழந்தை பிறந்த பின்னர் செம குண்டாக இருந்தார். தற்போது உடற்பயிற்சி, டயட் என உடலை ஜீரோ சைஸ்க்கு கொண்டு வந்து விட்டாராம் விரைவில் திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    While yesteryear actresses in Tamil cinema were well-endowed, today's younger crop of heroines makes sure they watch their weight and work out to get fit and fab. Actress who has been around for some time but who's now very conscious about her looks is Asin. This beauty also lost oodles of weight and got toned up as did Nayanthara, in the latter part of her career.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more