அஞ்சலி பெயரைக் கேட்டாலை பீதியாகும் கோலிவுட் ஹீரோக்கள்
சென்னை: அஞ்சலியின் பெயரைக் கேட்டாலே கோலிவுட் ஹீரோக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடுகிறார்களாம்.
அஞ்சலி கோலிவுட்டில் நல்லபடியாக வளர்ந்து வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் திடீர் என்று மாயமானார். அவர் மாயமானதை அடுத்து டோலிவுட்டும், கோலிவுட்டும் பரபரத்துவிட்டது.
போலீசாரின் சந்தேகப் பார்வையோ அவருக்கு நெருக்கமான ஹீரோக்கள் மீது விழுந்தது.

ஜெய்
போலீசார் நடிகர் ஜெய்யை சந்தேகித்தனர். ஆனால் அஞ்சலியின் சித்தி பாரதி தேவி ஜெய் மிகவும் நல்லவர், அவருக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று கூறிய பிறகே போலீசார் ஜெய்யை விட்டனர்.

ஆர்யா
போலீசார் சேட்டை நாயகன் ஆர்யாவை சந்தேகித்தனர். அவரோ என்னது, அஞ்சலி காணாமல் போய்விட்டாரா என்று பச்சப்புள்ள மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு ஒரு கேள்வியை கேட்டுவிட்டு தப்பித்துவிட்டார். மேலும் அஞ்சலி தானாக போலீசில் ஆஜரானதால் ஆர்யாவுக்கு பிரச்சனை இல்லாமல் போனது.

அஞ்சலியே வேண்டாம்
அஞ்சலியை தங்கள் படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்கள் விருப்பமாக உள்ளனர். ஆனால் அஞ்சலியை தயவு செய்து எடுக்காதீர்கள், தேவையில்லாத பிரச்சனை என்று ஹீரோக்கள் அலறுகிறார்களாம்.

எங்க மீது தானே பழி வரும்
அஞ்சலி பெயரைக் கேட்டாலே ஏன் இப்படி அலறுகிறீர்கள் என்று ஹீரோக்களிடம் கேட்டால், அவரை புக் செய்து படத்தில் நடித்துக் கொண்டிருக்கையில் மீண்டும் மாயமாகிவிட்டார் என்றால் போலீசார் எங்களை அல்லவா பிடிப்பார்கள். இதெல்லாம் எங்களுக்கு தேவையா என்று கேட்கின்றனராம்.


Click it and Unblock the Notifications











