பிறந்தநாள் அதுவுமா ராசி கண்ணா செய்த காரியம்... பாராட்ட வார்த்தைகள் இல்லை!
சென்னை : தமிழ் ரசிகர்களை இப்பொழுது மிகவும் கவர்ந்து வரும் நடிகை ராசி கண்ணா பிறந்தநாளுக்கு செய்த காரியத்தை பார்த்து பலரும் வியந்து போயினர்.
விஜய் தேவரகொண்டாவின் "வேர்ல்டு ஃபேமௌஸ் லவ்வர்" திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து அசத்தி இப்பொழுது தமிழில் கை நிறைய திரைப்படங்களுடன் படு பிஸியாக நடித்து வருகிறார்.
பிறந்தநாளுக்கு நடிகைகள் பலரும் கண்டமேனிக்கு பார்ட்டிகளில் செலவழித்து வரும் நிலையில் பிறந்த நாள் அதுவுமா ராசி கண்ணா செய்த செயல் இப்பொழுது ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறது.

கனவு கன்னி
இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை ராசி கண்ணா ஏற்கனவே ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படத் துறையில் கொடிகட்டி பறந்து வரும் நிலையில் இப்பொழுது தமிழ் ரசிகர்களின் சமீபத்திய கனவு கன்னியாக மாறியுள்ளார்.

மூன்று கதாநாயகிகளில்
அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவின் திரைப்படங்கள் பெரும் வரவேற்பு பெற்று வரும் நிலையில் சமீபத்தில் வெளியான "வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்" படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக ராசி கண்ணா நடித்திருந்ததை அடுத்து இப்பொழுது தமிழில் அரை டஜன் திரைப்படங்களுடன் படு பிஸியாக நடித்து வருகிறார்.

வித்தியாசமான முறையில்
பார்க்க தள தளவென நெய் கொழுக்கட்டை போல இருக்கும் ராசி கண்ணாவின் கவர்ச்சி கலந்த சேலை புகைப்படங்கள் சமீபத்தில் செம வைரலாகி வந்த நிலையில் நேற்று தனது பிறந்தநாளை வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளார்.

பிறந்தநாளை கொண்டாடி
நடிகைகள் பலரும் தங்களின் பிறந்தநாளுக்கு பார்ட்டி என்ற பெயரில் கண்டமேனிக்கு பணத்தை செலவழித்து வரும் நிலையில் அதற்கு அப்படியே மாறாக ராசி கண்ணா வீட்டுத் தோட்டத்தில் உடன் இருக்கும் குடும்பத்தார் மற்றும் பணியாளர்கள் உடன் இணைந்து வீட்டு தோட்டத்தில் செடிகளை நட்டு பிறந்தநாளை கொண்டாடி ரசிகர்களையும் இதே போல கொண்டாடுமாறு அன்போடு அறிவுறுத்தியுள்ளார். . ராசி கண்ணாவின் இந்த செயலுக்காக பலரின் பாராட்டுகளும் லைக்குகளும் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











