கோடை விடுமுறையில் கூட சுறுசுறுப்பாக இயங்கும் நடிகைகள்!
கோடை விடுமுறைய சகல தரப்பினரும் பல்வேறு வழிகளில் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் முன்னணி நாயகிகளான திரிஷாவும், நயனதாராவும் லீவு கூட எடுக்காமல் படு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்களாம்.
இதுகுறித்து திரிஷா கூறுகையில், எனக்கு இந்த ஆண்டு கோடை விடுமுறை கிடையாது. இந்திப் படத்தை முடிக்க வேண்டும். பிறகு கமல் சார் படம் வருகிறது. எனவே பெரிய அளவில் விடுமுறை கிடைக்காது. 3 அல்லது நான்கு நாட்கள் பிரேக் எடுத்துக் கொண்டு கமல் சார் படத்துக்கு போகப் போகிறேன் என்றார்.
நயனதாரா கூறுகையில், சிலநாட்கள் பிரேக் விட்டு துபாய்க்குப் போய் வந்தேன். தற்போது மறுபடியும் ஷூட்டிங்கில் பிசியாகி விட்டேன். இந்த கோடை காலத்தில் நான் மூன்று மொழிப் படங்களில் நடிக்கவேண்டியுள்ளது. வெயில் கொளுத்தத்தான் செய்கிறது. இருந்தாலும் வேறு வழியில்லையே. முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் ஷூட்டிங்குகளுக்குப் போய் வருகிறேன் என்றார்.
தமிழுக்கு நீண்ட காலத்திற்குப் பிறகு திரும்பி வந்திருக்கும் மமதா மோகன்தாஸும் விடுமுறை எடுக்காமல் விறுவிறுப்பாக படப்பிடிப்புகளுக்கு போய்க் கொண்டிருக்கிறாராம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த ஜூன் மாதம் நன்றாக ஓய்வெடுத்து விடுமுறையை அனுபவிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் ரொம்ப நாட்களுக்குப் பிறகு எனக்கு தமிழில் படம் கிடைத்துள்ளது. அதை விட்டுக் கொடுக்க மனம் வரவில்லை. எனவே லீவுக்கு விடை கொடுத்து விட்டேன். வெளிநாட்டில்தான் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. எனவே விடுமுறையை விட்டுவிட்டாலும் கூட நல்ல அனுபவம் காத்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சியே என்றார்.
--


Click it and Unblock the Notifications











