அது கீர்த்தி இல்லையாம், மடோனா செபாஸ்டியனாம்

By Siva

சென்னை: சசிகுமார் ஜோடியாக நடிப்பது கீர்த்தி அல்ல மடோனா என்று தெரிய வந்துள்ளது.

எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படம் கொம்புவச்ச சிங்கம்டா. வரும் நவம்பர் மாதம் 3ம் தேதி படப்பிடிப்பு துவங்க உள்ளது.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் காரைக்குடி மற்றும் பொள்ளாச்சியில் படமாக்கப்பட உள்ளது.

இந்தர் குமார் இந்த படத்தை தயாரிப்பதுடன் நடிக்கவும் உள்ளார்.

கீர்த்தி

கீர்த்தி

கொம்புவச்ச சிங்கம்டா படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக முதலில் தகவல் வெளியானது. கீர்த்தி சரியான ஜோடி தான் என்று கூறப்பட்டது. இல்லை இல்லை அவர் நடிக்கவில்லை என்று கீர்த்தி தரப்பில் இருந்து பின்னர் விளக்கம் அளிக்கப்பட்டது.

கிராமத்து பெண்

கிராமத்து பெண்

கொம்புவச்ச சிங்கம்டா படத்தில் கீர்த்தி அல்ல மடோனா செபாஸ்டியன் தான் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கிறாராம். இந்த தகவலை இந்தர் குமார் உறுதி செய்துள்ளார். படத்தில் மடோனா கிராமத்து பெண்ணாக நடிக்கிறாராம். இந்த படத்தை சுந்தர பாண்டியன் படத்தின் இரண்டாம் பாகம் என்று கூட கூறலாம் என்கிறார் தயாரிப்பாளர்.

மாற்றம்

மாற்றம்

சில மாற்றங்கள் மட்டுமே செய்கிறோம். சுந்தர பாண்டியன் படத்தில் இருப்பது போன்று தான் இந்த படத்திலும் சசிகுமாரின் கதாபாத்திரம் இருக்கும் என்று இந்தர் குமார் தெரிவித்துள்ளார். படத்தில் சூரி, யோகி பாபு ஆகியோர் காமெடி செய்ய உள்ளனர். பிரபல இயக்குனர் மகேந்திரன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பொங்கல்

பொங்கல்

தயாரிப்பாளர் இந்தர் குமார் வில்லன்களில் ஒருவராக நடிக்க உள்ளார். ஒரே ஷெட்யூலில் படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர். சிங்கத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். அப்படி என்றால் கொம்புவச்ச சிங்கம்டா அஜித்தின் விஸ்வாசத்துடன் மோதும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X