»   »  கெளஸின் பவுசு!

கெளஸின் பவுசு!

Subscribe to Oneindia Tamil

ஒரு காலத்தில் ஓஹோவென பிசியாக இருந்த கெளசல்யா இப்போது டிவிபெட்டிக்குள் முடங்கி விட்டார். சின்னத் திரையே வசதியாக, செளகரியமாகஇருப்பதால் பெரிய திரைக்கு பெரிய கும்பிடாக போடுகிறார்.

கார்த்திக், அப்பாஸ், பிரபுதேவா என செகண்ட் ஸ்டிரிங் நாயகர்களுடன் பெரியரவுண்டு அடித்தவர் கெளஸ். மும்பை மற்றும் கேரள நாயகிகளின் குவியலால் ஓரம்கட்டப்பட்டார். இருந்தாலும் கன்னடம், மலையாளம் என வேற ரூட்டில் போனதால்கொஞ்ச காலம் சினிமாவில் தாக்குப் பிடிக்க முடிந்தது.

இப்போது எல்லாம் போய் டிவி நடிகை ஆகி விட்டார் கெளசல்யா. சன் டிவியில்வெளியான மனைவி சீரியல், கெளஸுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது.இதையடுத்து சில புதுப் படவாய்ப்புகள் வந்தன. ஆனால் கெளசல்யா எதையுமேஒப்புக் கொள்ளவில்லை.


சொத்தை காரணங்களைக் கூறி தேடி வந்த தயாரிப்பாளர்களை விரட்டி அடித்தார்.எல்லாம் அம்மணிக்கு தமிழ் சினிமா மீதுள்ள கோபம்தான் காரணம். ஏனாம்? தமிழில்நல்ல படங்களே வருவதில்லை.

நல்ல இயக்குநர்களின் படத்தில் நடிக்கவே நான் விரும்பகிறேன். சின்ன ரோலாகஇருந்தாலும் நல்ல வேடமாக இருந்தால்தானே நடிக்க முடியும். அதனால்தான் தமிழ்படங்களில் நடிக்க விரும்பவில்லை என்று ஒரே போடாக போடுகிறார் கெளசல்யா.

ஒரு காலத்தில் தமிழில், கிடைத்த வேடங்களையெல்லாம் வாரிப் போட்டுக் கொண்டுவிழுந்து விழுந்து நடித்து டப்பு தேத்தியதை மறந்து விட்டு இப்படிப் பேசும்கெளசல்யா, மலையாளம், கன்னடப் படங்கள் என்றால் மறுப்பு ஏதும் சொல்லாமல்ஒத்துக் கொண்டு ஓடோடி உழைக்கிறாராம்.

இப்போது தெலுங்கிலும் அம்மணிக்கு ஒரு படம் கையில் இருக்கிறதாம். கூட்டிக்கழித்துப் பார்த்தால் கெளசல்யா கையில் 2 படங்கள்தான் இருக்கிறது என்கிறார்கள்மேட்டர் தெரிந்தவர்கள்.


இரண்டிலும் கூட கெளஸ் ஹீரோயின் இல்லையாம். இப்படி இருக்கையில் வருகிறதமிழ்ப் படங்களையும் தட்டி விட்டு பந்தா விட்டு வருகிறார் கெளஸ்.

ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணலாம், அந்த கதைதான் போங்க!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil