»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கெளசல்யா ஞாபகம் இருக்கா. கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்து சில படங்களில் நடித்து வேகமாக முன்னுக்குவந்து அதே வேகத்தில் காணாமல் போனவர்.

தமிழ் கைவிட்டாலும் மலையாளத்தில் தாய் மொழியான கன்னடத்திலும் சில வாய்ப்புக்கள் வந்தன. ஆனால்,நினைத்த அளவுக்கு பணம் கிடைக்கவில்லை. இதனால் எப்படியாவது தமிழில் மீண்டும் இடம் பிடிக்க வேண்டும்என்று வெறி கொண்டு அலைகிறார்.

யார் யாரையோ பார்த்தும் எந்தப் பலனும் கிடைக்காததால் இப்போது தனது பி.ஆர்.ஓ. மூலம் தயாரிப்பாளர்கள்மற்றும் டைரக்டர்களுக்கு ஒரு செய்தியை அனுப்பி வருகிறார். அதாவது கவர்ச்சியாக நடிக்கத் தயார் என்று கூறிஅனுப்புகிறார்.

கெளசல்யா கவர்ச்சி காட்டத் தயார் என்றாலும் அதைப் பார்க்க யார் தயாராக இருப்பார்கள் என்று கேட்டுபி.ஆர்.ஓவை விரட்டி விட்டுள்ளனர் பல தயாரிப்பாளர்கள். ஒடிந்து விழுந்துவிடும் நிலையில் இருக்கும்கெளசல்யாவுக்கு ஏன் இந்த தேவையில்லாத ரிஸ்க் என்று பதில் கேள்வி எழுப்பியுள்ளர் சில தயாரிப்பாளர்கள்.

ஆனால், அதையெல்லாம் மீறி ஒரு தயாரிப்பாளர் மட்டும் கெளசல்யாவை கவர்ச்சியாக நடிக்க வைக்க ஒப்புக்கொண்டுவிட்டாராம். கிரண் ரேஞ்சுக்குத் தான் டிரஸ் இருக்கும், ஈர சேலை சீன்கள் இருக்கும் பரவாயில்லையாஎன்று கேட்டு அதற்கு கெளசல்யாவும் ஒப்புக் கொள்ள கையில் அட்வான்ஸையும் கொடுத்துவிட்டதாகத் தகவல்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil