»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

கெளசல்யா இன்று
இந்தப் பூனையும் பால் குடிக்குமா கதை தான் கெளசல்யாவுடயைது.

இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்து வந்தவரை தமிழ் சினிமா கண்டுகொள்ளாமல் விட்டது.

ஆரம்ப காலத்தில்விஜய்க்கு ஜோடியாக (நேருக்கு நேர், பிரியமுடன்) நடித்தவரைக் கூட்டி வந்து அதே விஜய் யின் வாயால்ஆண்ட்டி என்று அழைக்க வைத்தார்கள் திருமலை படத்தில்.

அந்தப் படத்தில் ரகுவரனுக்கு ஜோடியாக்கப்பட்டார் கவுசல்யா. இதனால் பொறுத்தது போதும் பொங்கி எழு எனமனோகரா ஸ்டைலில் குதித்தார் கெளசல்யா.

தனது எடை கூடிவிட்டதையும், உடல் கவர்ச்சி காட்டும் லாவகத்துக்குவந்துவிட்டதையும் சுட்டிக் காட்ட அரை, குறை உடைகளில் ஆல்பங்கள் எடுத்து தமிழ் தயாரிப்பாளர்கள் மத்தியில்ரவுண்டுக்கு விட்டார்.

புதிய தயாரிப்பாளர்களையும் விடவில்லை. அவர்கள் கைக்கும் ஆல்பங்கள் வந்தன. பின்னர் தானே நேரில்சென்று சான்ஸ் கேட்டார் கவுசல்யா. அதற்கு கைமேல் பலன் கிடைத்துவிட்டது.

ஆள் ஒருவாராக சிக்ஆகிவிட்டதை நேரிலேயே பார்த்துக் கொண்ட தயாரிப்புப் பார்ட்டிகளில் சிலர் வாய்ப்பு தருவதாக உறுதிமொழிகூறினர்.

மனதில் என்ற படத்தைத் தயாரிக்கும் எஸ்.ஆர்.எஸ். பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் உடனடியாக கவுசல்யாகையில் அட்வான்ஸை திணித்துவிட்டது.

கார்த்திக் இரு வேடங்களில் நடிக்கும் "மனதில் படத்தில் கவர்ச்சியுடன்கூடிய கதாநாயகியாகிவிட்டார் கவுசல்யா.


கெளசல்யா அன்று
சூட்டிங் ஸ்பாட்டில் தேர்ந்த கவர்ச்சி நடிகையைப் போல கேமரா முன் துணிந்து உடைகளைக் களைந்து நிற்கிறாராம்கவுசல்யா.

இந்தப் படத்தில் ஹீரோவும் கார்த்திக், வில்லனும் கார்த்திக்கே. (அவருக்கு எப்போதும் அவர் தான் வில்லன் என்பதுதனிக் கதை).

கவுசல்யா கவர்ச்சி காட்டினாலும் அது எவ்வளவு தூரம் கைகொடுக்கும் என்று தெரியாததால் படத்தில்அபிநயஸ்ரீயையும் சேர்த்திருக்கிறார்கள்.

கவர்ச்சியில் காட்டுகிறேன் என்று அபிநயஸ்ரீ ரேஞ்சுக்கு கவுசல்யா போய்விடாமல் இருந்தால் சரி.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil