ஷங்கர் மகனுக்கு ஜோடி.. LIK சொதப்பிய பிறகும் ஒரே நேரத்தில் 2 படங்களில் கமிட்டான க்ரித்தி ஷெட்டி!
சென்னை: நடிகை க்ரித்தி ஷெட்டி நேற்று ஒரே நாளில் 2 புதிய படங்களுக்கு பூஜை போட்டது இண்டஸ்ட்ரியை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இரண்டு படங்களின் பூஜையும் ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
அனில் ரவிப்புடி இயக்கத்தில் வெங்கடேஷ் நடிக்கும் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ், க்ரித்தி ஷெட்டி நடிக்கும் படத்தின் பூஜை நேற்று போடப்பட்டது.

மேலும், ஷங்கர் மகன் அர்ஜித் ஷங்கர் நடிக்கும் 'லவ்வர் பாய்' படத்தின் பூஜையும் நேற்று போடப்பட்டு போட்டோக்கள் வெளியாகி உள்ளன. ஒரே நேரத்தில் புதிதாக க்ரித்தி ஷெட்டிக்கு 2 படங்களில் நடிக்கும் ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கஸ்டடி முதல் எல்ஐகே வரை சொதப்பல்: ஹ்ரித்திக் ரோஷனின் சூப்பர் 30 படத்தில் நடித்து அறிமுகமானவர் தான் க்ரித்தி ஷெட்டி. விஜய் சேதுபதி மகளாக அவர் நடித்த உப்பென்னா தெலுங்கு படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால், வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கஸ்டடி, லிங்குசாமி இயக்கத்தில் வெளியான வாரியர், கார்த்தியுடன் நடித்த வா வாத்தியார், கடைசியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் உடன் நடித்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என தொடர்ந்து க்ரித்தி ஷெட்டியின் படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றி பெறாமல் சொதப்பி வருகின்றன. ரவி மோகன் உடன் நடித்த ஜீனி படம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.
ஷங்கர் மகன் ஜோடி: அட்லியின் உதவி இயக்குநரான அர்ஜுன் இயக்கத்தில் ஷங்கர் மகன் அர்ஜித் ஷங்கர் ஹீரோவாக அறிமுகமாகும் லவ்வர் பாய் படத்தின் பூஜை நேற்று கோலாகலமாக நடைபெற்றது. அந்த படத்தில் அர்ஜித் ஷங்கருக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி கமிட் ஆகியுள்ளார். கேவிஎன் தயாரிக்கும் இந்த படத்தின் பூஜையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் பங்கேற்றது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
ஒரே நாளில் 2 பட பூஜை: அனில் ரவிப்புடி இயக்கத்தில் வெங்கடேஷ், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்துக்கான பூஜையும் போடப்பட்டது. அந்த படத்திலும் க்ரித்தி ஷெட்டி நடிக்கிறார். கீர்த்தி சுரேஷ் உடன் க்ரித்தி ஷெட்டியும் அழகு பதுமையாக தேங்காய் உடைத்து பூஜையை ஆரம்பித்து வைத்தார். அடுத்தடுத்து க்ரித்தி ஷெட்டிக்கு பட வாய்ப்புகள் குவியக் காரணமே அவரது அழகும் நடிப்புத் திறமையும் தான் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications