கஸ்டடி, வா வாத்தியார் தோல்வி.. கண்டிப்பா க்ரித்தி ஷெட்டிக்கு LIK கை கொடுக்கும்.. டிரெண்டிங்கில் தீமா!
சென்னை: ஹ்ரித்திக் ரோஷனின் சூப்பர் 30 இந்தி படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் தான் க்ரித்தி ஷெட்டி (Krithi Shetty). விஜய் சேதுபதி தெலுங்கில் நடித்த உப்பன்னா படத்தில் அவருக்கு மகளாக நடித்து அசத்தினார். அதன் காரணமாகவே விஜய் சேதுபதி அவருடன் ஜோடியாக நடிக்க மாட்டேன் என முடிவெடுத்துவிட்டார்.
2023ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிப் படமாக உருவான கஸ்டடி படத்தின் மூலம் தான் கோலிவுட்டில் அறிமுகமானார் க்ரித்தி ஷெட்டி. ஆனால், அவருக்கு முதல் படம் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது.

அதன் பின்னர், அவர் தொடர்ந்து நடித்த படங்கள் எல்லாமே ரிலீஸ் ஆகாமல் சில ஆண்டு காலம் தள்ளிப்போய் அவரை மனதளவில் காயப்படுத்தியது.
ஹாட்ரிக் தோல்வியை தவிர்ப்பாரா?: கஸ்டடி, வா வாத்தியார் என அடுத்தடுத்து தமிழில் க்ரித்தி ஷெட்டி நடித்த 2 படங்களுமே தோல்வியை சந்தித்தன. இந்த ஆண்டு பொங்கலுக்கு கார்த்தி நடிப்பில் வெளியான வா வாத்தியார் படத்தையும் க்ரித்தி ஷெட்டி ரொம்பவே நம்பினார். ஆனால், அந்த படமும் அவரை ஏமாற்றிய நிலையில், அடுத்து அவர் நடிப்பில் உருவான ஜீனி வெளியாகுமா? அல்லது எல்ஐகே வெளியாகுமா? என்கிற கேள்விகள் கிளம்பிய நிலையில், வரும் ஏப்ரல் 10ம் தேதி லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் திரைக்கு வருவது உறுதியாகி உள்ளது.

4வது 100 கோடி?: பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் அடுத்த பாக்ஸ் ஆபீஸ் நாயகனாக மாறியுள்ளார். போன் பிரச்சனையால் காதலுக்கு ஆப்பு ஏற்படும் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் ஆப் மூலமாக லவ்வுக்கு ஆப்பு வரும் ஃப்யூரிஸ்டிக் லவ் ஸ்டோரி கதைக்கு சரியாக இருப்பார் என விக்னேஷ் சிவன் பிரதீப்பை வைத்து ஆரம்பித்த LIK திரைப்படம் பல பிரச்னைகளை கடந்து வெளியாக காத்திருக்கிறது.
அந்த படம் ரிலீஸ் ஆகா தாமதம் ஆன சூழலில் டிராகன், டியூட் என கடந்த ஆண்டு 2 பிளாக்பஸ்டர் படங்களை பிரதீப் ரங்கநாதன் கொடுத்து தனது மார்க்கெட்டை உயர்த்தியுள்ளார். இந்நிலையில், அவருக்கு 4வது 100 கோடி வசூல் படமாக லவ் இன்சூரன்ஸ் கம்பெனி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் க்ரித்தி ஷெட்டிக்கும் கோலிவுட்டில் முதல் வெற்றிப் படம் கிடைக்கும். அப்படியே அந்த ரவி மோகனின் ஜீனி படமும் இந்த வருஷத்துக்குள் வெளியானால் நல்லா இருக்கும்.


Click it and Unblock the Notifications











