லக்கேஜ்ஜை காணலை... நாகரிமாக பேசச் சொல்லிக்கொடுங்க... ஏர்லைன்ஸை விளாசிய ஜி.வி.பிரகாஷ் ஹீரோயின்

By

மும்பை: தனது லக்கேஜ்ஜை தொலைத்தற்காக, பிரபல நடிகை ஏர் இந்தியா விமான நிறுவனத்தை கடுமையாகச் சாடியுள்ளார்.

தமிழில் பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கிய புருஸ்லீ படத்தில் ஜிவி.பிரகாஷ் குமாருடன் நடித்திருந்தவர் இந்தி நடிகை கீரித்தி கர்பண்டா.

இந்தியில் ராஸ்:ரீபூட், கெஸ்ட் இன் லண்டன், ஹவுஸ்புல் 4, பாகல்பன்டி உட்பட பல படங்களில் நடித்துள்ளர்

துல்கர் சல்மான்

துல்கர் சல்மான்

தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ள இவர், தமிழில் இப்போது 'வான்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் துல்கர் சல்மான் ஹீரோ. கல்யாணி பிரியதர்ஷன், பிரியா பவானி சங்கர், சினேகா உட்பட பலர் நடிக்கின்றனர். கெனன்யா பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஏர் இந்தியா விமானம்

ஏர் இந்தியா விமானம்

இதற்கிடையே நடிகை கீர்த்தி சமீபத்தில் ஏர் இந்தியா விமானத்தில் பயணித்துள்ளார். மும்பையில் இருந்து கோவா சென்றதாகத் தெரிகிறது. அப்போது அவர் லக்கேஜ்ஜை விமான நிறுவனம் மாற்றி அனுப்பி விட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கீர்த்தி ட்வீட்டரில், ஏர் இண்டியாவை டேக் செய்து இதுபற்றி புகார் தெரிவித்திருந்தார்.

மீண்டும் தொலைத்த

அதில், எனது லக்கேஜ்ஜை மீண்டும் தொலைத்த ஏர் இண்டியாவுக்கு நன்றி. உங்கள் ஊழியர்களுக்கு பயணிகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்கிற அடிப்படை நாகரிகத்தை நீங்கள் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். நடிகை கீர்த்தி கர்பண்டாவின் இந்தப் பதிவு இணையத்தில் வைரலானது.

மன்னிப்பு கேட்டது

இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனம் அவரிடம் ட்விட்டரில் மன்னிப்பு கேட்டது. லக்கேஜ் மற்றும் விவரங்களை அவரிடம் கேட்டிருந்தது. இதற்கு பதிலளித்த கீர்த்தி, உங்கள் மன்னிப்பை ஏற்க விரும்புகிறேன். ஆனால், என் லக்கேஜ் பற்றி எந்த அறிகுறியும் இல்லையே... கோவா மற்றும் மும்பையில் உள்ள உங்கள் ஊழியர்கள், லக்கேஜ் பற்றி என்னிடம் பகிர்ந்துகொள்ளும் மனநிலையில் இல்லை என்று கூறியிருந்தார்.

நடிகைன்னா

நடிகைன்னா

பின்னர் அவரது லக்கேஜ் கோவாவில் இருப்பதாகவும் முகவரி கொடுங்கள், அனுப்பி வைக்கிறோம் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இதையடுத்து, 'நடிகைன்னா விழுந்து விழுந்து மன்னிப்புக் கேட்பீங்க, சாதாரண பயணியோட லக்கேஜ்னா, கண்டுக்கவே மாட்டீங்க... அப்படித்தானே?' என்று நெட்டிசன்கள் ஏர் இந்தியாவை விளாசியுள்ளனர். இதற்கு முன்பும் ஏர் இந்தியா விமானத்தில் தனது லக்கேஜ்ஜை தொலைத்துள்ளார் கீர்த்தி.

சோனம் கபூர்

சோனம் கபூர்

ஏற்கனவே பல நடிகைகளுக்கு இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. கடந்த மாதம்
நடிகை சோனம் கபூரின் லக்கேஜ், பிரிட்டீஸ் ஏர்வேஸ் விமானத்தில் தொலைந்தது. இரண்டு முறை தனது லக்கேஜ்ஜை தொலைத்தேன் என்று அவர் கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. நடிகை பூஜா ஹெக்டோ, அக்‌ஷய்குமார் உட்பட பல நடிகர், நடிகைகள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X